நீலமேகம் பிள்ளை

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

தியாகி நீலமேகம் பிள்ளை தனது 21வது வயதில், 1942ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இவர் சூலை 8, 2014 அன்று தமது 93வது அகவையில் மதுரையில் காலமானார்.[1]

தியாகி நீலமேகம் பிள்ளை
இறப்புஜூலை 8, 2014 (அகவை 93)
மதுரை
பணிஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்

உடல் தானம் தொகு

மதுரை, கனகவேல் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்த நீலமேகம் பிள்ளை, இந்திய விடுதலைக்குப் பின் பல தொழிற்சங்கங்களில் பங்காற்றியவர். தான் இறந்தபின் தனது உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு பயன்படும் வகையில், தானம் செய்யுமாறு தியாகி நீலமேகம் பிள்ளை உயில் எழுதி வைத்திருந்தபடி, அவரது உடல் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமேகம்_பிள்ளை&oldid=2715451" இலிருந்து மீள்விக்கப்பட்டது