நீல்தமான் காத்ரி

இந்திய அரசியல்வாதி

நீல்தமன் காத்ரி (Neeldaman Khatri) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய சனதா கட்சியின் தலைவரும் ஆவார். 1970 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று நரேலாவில் சத்பிரகாசுக்கு மகனாக இவர் பிறந்தார். தில்லியின் ஐந்தாவது சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நரேலா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது மனைவி கேசராணி தில்லி நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக 2012 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] நீல்தமன் காத்ரி மற்றும் கேசராணி தம்பதியருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Neeldaman Khatri". Delhi Assembly.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்தமான்_காத்ரி&oldid=3636903" இலிருந்து மீள்விக்கப்பட்டது