நூர் பானோ (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

பேகம் நூர் பானோ (Begum Noor Bano) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் 11 வது மக்களவை மற்றும் 13 வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் இரண்டு முறையும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராம்பூரிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேகம் நூர் பானோ
11வது மக்களவை உறுப்பினர் மற்றும் 13வது மக்களவை உறுப்பினர்
தொகுதிராம்பூர், உத்திர பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1939 (1939-11-11) (அகவை 84)
பிவானி மாவட்டம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்செய்யத் சுல்பிகர் அலி கான்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பேகம் நூர் பானோ மெஹ்டப் ஸமனி பேகம், [1] லோகரு மாகாணத்தின் கடைசி நவாப்பான அமின் உத்-தின் அகமது கான் என்பவரின் மகள் ஆவார். இவரது தாயார் சவுகத் ஜெஹன் பேகம் ஆவார். , லோகரு ஒரு சுதேசி அரசுக்கும் இப்போது, பிவானி மாவட்டத்தில் உள்ளது.இவர் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று பிறந்தார். இவர் ஜெய்ப்பூரில் உள்ள எம்ஜிடி பெண்கள் பொதுப் பள்ளியிலிருந்து தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பேகம் நூர் செய்யத் சுல்பிக்கர் அலி கான் என்பவரை ராம்பூரில் 1956 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். [2]

குறிப்புகள் தொகு

  1. "Rampur Partywise Comparison". eci.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  2. Genealogy of the Nawabs of Loharu Queensland University.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_பானோ_(அரசியல்வாதி)&oldid=3101861" இலிருந்து மீள்விக்கப்பட்டது