நெடும்பல்லியத்தனார்

நெடும்பல்லியத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.இவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடையைப் புகழந்து பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 64[1] எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. இந்த ஒரு பாடலைத் தவிர வேறு பாடல் இவர் பெயரில் இல்லை.

பாடல் சொல்லும் செய்தி தொகு

  • விறலியாற்றுப்படை

குடுமிக் கோமான் களிற்றுப் படையுடன் சென்று பகைப்புலத்தில் போரிட்டுக்கொண்டிருக்கிறான்.

விறலி! நம்மிடம் உள்ள யாழ், ஆகுளி, பதலை முதலான இசைக்கருவிகளுடன் நாம் போர்களத்துக்கே சென்று அவனைப் பாடிப் பரிசில் பெறச் செல்லலாமா? என்கிறார் புலவர்.

குடுமிக் கோமான் தொகு

குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். குடுமி என்னும் இந்த ஊரை மீட்டுக்கொண்ட பாண்டியன் குடுமிக் கோமான் எனப்பட்டான்.

பல்யாகசாலை தொகு

குடுமியான்மலை வெற்றிக்குப் பின்னர் இவன் பல யாகசாலைகள் அமைத்து மக்களுக்குத் தொண்டு புரிந்தான்.

வெளி இணைப்புகள் தொகு

  1. நெடும்பல்லியத்தனார் பாடல் புறநானூறு 64
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடும்பல்லியத்தனார்&oldid=2718108" இலிருந்து மீள்விக்கப்பட்டது