நெப்போலியன் ஹில்

நெப்போலியன் ஹில் (Napoleon Hill, அக்டோபர் 26, 1883 - நவம்பர் 8, 1970) ஓர் அமெரிக்க எழுத்தாளர். இவரது மிகவும் பிரபலமான திங்க் அண்ட் க்ரோ ரிச் (1937), எல்லா காலத்திலும் சிறந்த விற்பனையான புத்தகங்களுள் ஒன்றாக உள்ளது. 1970 இல் ஹில் இறந்த நேரத்தில், திங்க் அண்ட் க்ரோ ரிச் 20 மில்லியன் பிரதிகள் விற்றிருந்தது.[1] இவரது முதல் புத்தகம் 'தி லா ஆஃப் சக்சஸ்' 1928-ஆம் ஆண்டில் வெளியானது.

நெப்போலியன் ஹில்
Napoleon Hill
பிறப்பு(1883-10-26)அக்டோபர் 26, 1883
பவுண்டு, வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 8, 1970(1970-11-08) (அகவை 87)
தென் கரொலைனா
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விற்பனை, விரிவுரையாளர்
குடியுரிமைஅமெரிக்கர்
காலம்1928–1970
வகைஅபுனைவு, எப்படிச் செய்வது
கருப்பொருள்தனிப்பட்ட வளர்ச்சி, எப்படிச் செய்வது, தன்முயற்சி, ஊக்கம், விற்பனை, நிதி, முதலீடு
குறிப்பிடத்தக்க படைப்புகள்திங்க் அண்ட் குரோ ரிச்
தி லா ஆஃப் சக்சஸ்
கையொப்பம்
நெப்போலியன் ஹில்லின் கையொப்பம்
இணையதளம்
naphill.org

ஹில் தனது சொந்த அனுபவங்களினூடாக நம்பிக்கை தரும் கருத்துக்களை வழங்கியுள்ளார். 1933 ஆம் ஆண்டு தொடங்கி 1936 ஆம் ஆண்டு வரையில் நெப்போலியன் ஹில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். மனிதனின் மனதில், “அடையமுடியும் என்ற நம்பிக்கை தோன்றிவிட்டால் எதையும் அடையமுடியும்” என்பது ஹில்லின் தனித்தன்மை வாய்ந்த அடையாளமாக காணப்பட்டது. எவ்வாறு சாதிப்பது எவ்வாறு சராசரி நபர்களை வெற்றி சென்றடைகிறது உள்ளிட்ட சூத்திரங்கள் இவரது புத்தகங்களில் கருவாக காணப்பட்டன.[2][3]

வாழ்க்கையும் தொழிலும் தொகு

தென்மேற்கு வர்ஜீனியாவிலுள்ள, பவுண்டு அப்பால்சியன் நகரத்திற்கு வெளியே ஒரு சிறிய அறையில்தான் நெப்போலியன் ஹில் பிறந்தார்.[4] ஹில் ஒன்பது வயது சிறுவனாக இருக்கும்போது அவரது தாய் இறந்தார். அதன் பின்னர் இரண்டு வருடங்களில் அவரது தந்தை மறுமணம் செய்துகொண்டார்.ஹில் தனது 13 வது வயதிலேயே மிகுந்த அறிவாற்றல் மிக்கவராக 'மலை நிருபரென' வேர்ஜீனியா பகுதியில் இயங்கிவந்த உள்ளூர் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். அவர் சட்டகல்லூரியில் நுழைய நிருபர் தொழில் பண ரீதியில் உதவியது, எனினும் குறுகிய காலத்தில் ஹில் பணப்பிரச்சினை காரணமாக சட்டக்கல்லூரி படிப்பை கைவிட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்போலியன்_ஹில்&oldid=3287681" இலிருந்து மீள்விக்கப்பட்டது