நேத்ராவதி ஆறு

நேத்ராவதி ஆறு (Netravati River) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள குதிரேமுக் பகுதியில் உற்பத்தியாகும் ஓர் ஆறு ஆகும். குதிரேமுக்கிலுள்ள பேங்கராபாலிகி சமவெளியின் எலநீரு மலையில் இப்பகுதி அமைந்துள்ளது. நேத்ராவதி நதி என்றும் இதை அழைக்கிறார்கள். கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத்தலமான தர்மசுதாலா நகரின் குறுக்கே இந்நதி பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் புனித நதிகளில் ஒன்றாகவும் இந்நதி பார்க்கப்படுகிறது. மங்களூரு நகருக்குத் தெற்கே உப்பினங்காடி நகரத்திலுள்ள குமாரதாரா ஆற்றுடன் சேர்ந்து பாயும் நேத்ராவதி நதி பின்னர் அரபிக் கடலில் கலக்கிறது. பண்ட்வால் மற்றும் மங்களூரு நகரங்களுக்கு நேத்ராவதியே மிகமுக்கியமான தண்ணீர் ஆதாரமாகும். நேத்ராவதி இரயில்வே பாலம் மங்களூருக்கான நுழைவாயிலாக விளங்கும் முக்கியமான பாலங்களில் ஒன்றாகும்.

இரயிலில் இருந்து நேத்ராவதி நதியின் தோற்றம்
நேத்ராவதி ஆறு
Nethravati River
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகங்காமூலா, சிக்மகளூர் மாவட்டம்,கர்நாடகா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக் கடல்
நீளம்106 கி.மீ
நேத்ராவதி ஆறு
மங்களூரில் நேத்ராவதி
நேத்ராவதி இரயில்வே பாலம் மங்களுரின் நுழைவாயில்
நேத்ராவதியின் மீது கட்டப்பட்ட உல்லால் பாலம், மங்களூரு

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இது பண்ட்வால் ஆறு என்று அழைக்கப்பட்டது; முக்கிய நகரமான பண்ட்வால் அதன் கரையில் காணப்படுகிறது. நேத்ராவதி ஆற்றைப் பற்றிய அடையாளங்களை, தென்மேற்கு பருவமழையின் போது கூற இயலாது என 1855 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தென்னிந்தியாவின் செய்திக்களஞ்சியத்தில் காணலாம். இந்த ஆறு சுமார் 200 அங்குலம் அகலம் கொண்டது. பெரிய பாறைகள் நிறைந்த ஒரு படுகையுடன் முக்கியமாக மைக்கா மற்றும் கார்னெட்டு என அழைக்கப்படும் சிறிய கோமேதகம் வகை சிலிக்கேட்டுகளால் இப்பாறைகள் உருவாக்கப்பட்டவையாகும். இப்பாறைகளில் சியனைட்டுகளும் காணப்படுகின்றன. ஏனெனில் சதை வண்ண பெல்சுபார் கனிமத்துடன் கூடிய அழகான தீப்பாறை துண்டுகள் சிற்றோடைகளின் படுகைகளில் காணப்படுகின்றன. நேத்ராவதி நதியை சிறிய நாட்டுப் படகுகள் மூலமும் பல மைல்களுக்கு செல்ல முடியும் . மங்களூர் வழியாக செல்லும் நேத்ராவதி விரைவு இரயிலுக்கு இந்த நதியின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பண்ட்வால் நகரம் நேத்ராவதி நதி நிரம்பி வழிகின்ற மழைக்காலங்களில் நீரில் மூழ்கியுள்ளது. பல குடியிருப்பாளர்கள் ஊரை விட்டு வெளியேறி, வேறு இடங்களில் குடியேறி முன்னேறியுள்ளனர். 1928 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் நகரத்தின் பெரியவர்கள் நினைவுகூர்ந்துள்ள வகையில் இந்நதியில் பெரிய வெள்ளம் ஏற்பட்டது.

நதியின் போக்கு தொகு

நேத்ராவதி நதி கர்நாடக மாநிலத்தில் உள்ள குத்ரேமுக மலைத்தொடரின் எல்லநீர் மலையில் உள்ள பாங்க்ராபாலிகே வன பள்ளத்தாக்கில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகிறது. இந்த நதி சுமார் 1,353 சதுர மைல் வடிநிலப் பரப்பளவை கொண்டுள்ளது [1]. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுப்பிரமண்ய மலைத்தொடரில் தோன்றும் குமாரதாரா நதி, உப்பினங்காடி கிராமத்திற்கு அருகில் நேத்ராவதி நதியைச் சந்திக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் அரபிக் கடலில் கலக்கிறது.

விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் தொகு

நேத்ராவதி ஆற்றின் கரையில் குடியேறிய மக்கள் முக்கியமாக விவசாயம் மற்றும் மீன்பிடித்தல். தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழையின் போது விவசாயத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக நேத்ராவதி நதி வளம் சேர்க்கிறது. பெரும்பாலான மக்களின் நல் வாழ்க்கையில் நேத்ராவதி நதிக்கு பங்கிருக்கிறது. ஆற்றைச் சுற்றி குடியேறிய பெரும்பான்மையான மக்கள் பலர் இங்கு மீன்பிடித்தலைப் பயிற்சி செய்துள்ளனர். கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படும் சிறந்த மணலையும் இப்பகுதி மக்கள் வர்த்தகம் செய்கிறார்கள்.மணல் ஆற்றின் படுகையிலிருந்து இவர்களால் எடுக்கப்படுகிறது.

சர்ச்சைகள் தொகு

இந்த ஆற்றில் பல சிறிய நீர்மின் திட்டங்கள் மற்றும் நீர் திசைதிருப்பல் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதனால் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க பிராந்தியத்தின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுகிறது; மேலும் பல திட்டங்கள் திட்டமிடல் நிலையில் உள்ளன, சில செயல்படுத்தப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேலே உள்ள வறண்ட நிலப்பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் ஆற்றின் பாதையை மாற்றும் திட்டத்தை முன்னிறுத்தி சமீபத்திய சர்ச்சை எழுந்துள்ளது [2]. ஆற்றின் பாதையை மாற்றுவது சில நிபுணர்களின் கூற்றுப்படி எதிர்பாராத சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, நன்னீரின் வெளியேற்றம் குறைவதாலும், பின்னர் கடலில் பாயும் ஊட்டச்சத்துக்கள் வீழ்ச்சியடைவதாலும் இது கடல் வாழ்வை பாதிக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் மழைக்காடுகளின் இழப்பு மட்டுமின்றி . நேத்ராவதி ஆற்றில் முன்மொழியப்பட்ட நீர் மின்சார திட்டங்களுக்கும் சில எதிர்ப்புகள் எழுந்துள்ளன [3] Also some opposition has arisen to the proposed hydro electric projects on Netravati river.[4].

மேற்கோள்கள் தொகு

  1. Minutes of proceedings of the Institution of Civil Engineers, Volume 174. Institution of Civil Engineers (Great Britain). பக். 41. 
  2. "Minister promises help for Netravati scheme". தி இந்து (Chennai, India). 2009-07-20 இம் மூலத்தில் இருந்து 2010-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100525184517/http://www.hindu.com/2009/07/20/stories/2009072059920600.htm. பார்த்த நாள்: 2010-02-01. 
  3. "Sapping Lifelines". டெக்கன் ஹெரால்டு (Bangalore, India). 2001-07-20. http://tumkurameen.blogspot.in/2006/03/sapping-lifelines_767.html. பார்த்த நாள்: 2001-07-20. 
  4. "Netravati diversion project opposed". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125110920/http://www.hinduonnet.com/2003/02/22/stories/2003022203070300.htm. பார்த்த நாள்: 2010-02-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேத்ராவதி_ஆறு&oldid=3746185" இலிருந்து மீள்விக்கப்பட்டது