நேர்மையான ஹேக்கிங்

நேர்மையான ஹேக்கிங் (ethical hacking) எனப்படுவது தகவல்களை பாதுகாக்கும் பணியாகும். ஒரு நிறுவனத்தில் அல்லது தனிநபரின் அல்லது அரசாங்கத்தின் தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தை கைப்பற்றி தகவல்களை திருடும் ஹேக்கர்களைப்போலவே தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளே புகுந்து தகவல் திருடப்படும் வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்து தகவல் தரவு களஞ்சியத்திலுள்ள ஓட்டைகளை அடைத்து தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பதாகும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிக சம்பளம் பெறும்துறையாக இது விளங்குகிறது. வங்கியின் கடனட்டை, பற்று பண அட்டை போன்றவற்றின் கடவுச்சொற்கள் போன்றவற்றை பாதுகாப்பது ஒரு உதாரணமாகும்.

இங்கும் கருந்தொப்பி, வெண்தொப்பி, மண்ணிறதொப்பி என பல பிரிவுககளுண்டு.

கறுப்பு பெட்டி சோதனை, வெள்ளைபெட்டி சோதனை, மண்ணிறபெட்டி சோதனை என்ற முறைகளில் தகவல்களைப்பெற்று சோதனைசெய்து தகவல்களை நிர்வாகித்து அதற்கான நுட்பங்களை பாதுகாப்பதே நேர்மையான ஹேக்கரின் வேலையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்மையான_ஹேக்கிங்&oldid=3802377" இலிருந்து மீள்விக்கப்பட்டது