நேர வங்கியியல்

நேர வங்கியியல் அல்லது நேர வைப்பகவியல் என்பது பணத்துக்குப் பதிலாக நேரத்தை அலகாகப் பயன்படுத்தி சேவைப் பரிமாற்றத்தை ஏதுவாக்கும் ஒரு முறைமை ஆகும். நேர வங்கி என்பது நேர வங்கியியலை நடைமுறைப்படுத்தும் ஒரு குமுகம் ஆகும். இந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு சேவையை செய்வதன் மூலம் (நேரத்தை வழங்குதல்) ஒருவர் நேர வங்கியில் வைப்புச் செய்யலாம். பின்னர் அவருக்கு ஒரு உதவி அல்லது சேவை தேவைப்படும் போது அந்த வங்கியில் பிற ஒரு உறுப்பினரிடம் இருந்து தனது வைப்பைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இது ஒரு சமூக இயக்கமாக வளர்ந்து வருகிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர_வங்கியியல்&oldid=3219040" இலிருந்து மீள்விக்கப்பட்டது