நோக்கியா லூமியா 800

நோக்கியா லூமியா 800 (Nokia Lumia 800) விண்டோசு தொலைபேசி இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் நுண்ணறிபேசியாகும். இதனை அக்டோபர் 26,2011 அன்று நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி இசுடீபன் எலோப்பால் நோக்கியா உலகம் 2011 நிகழ்வின்போது வெளியிடப்பட்டது.[2] நோக்கியா தனது சிம்பியான் மற்றும் மீகோ இயங்குதளங்களிலிருந்து உயர்ரக கைபேசிகளை விண்டோசு தொலைபேசி இயங்குதளத்திற்கு மாற்றுகின்ற திட்டத்தின் முதற்படியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் கனரக அடித்தளம் பாலிகார்பனேட் நெகிழியிலான நோக்கியா N9ஐக் கொண்டு வலதுபுறத்தில் படப்பிடிப்புக் கருவிக்கான பொத்தானையும் இரட்டை மின்உமிழ் திடீர் ஒளிர்விகளை கார்ல்-சீயெஸ் லென்சுகளுக்கு மேலாகவும் அமைத்துள்ளது;[3] மின்தேக்கி மென்பொருள் தட்டச்சுகளுக்காக திரையளவை 3.7" ஆகக் குறைத்துள்ளது.இது ஐக்கிய இராச்சியத்தில் நவம்பர் 16,2011 அன்று விற்பனைக்கு வந்தது.[4]

நோக்கியா லூமியா 800
நோக்கியா லூமியா 800
முழக்கம்மக்களை இணைத்திட
தயாரிப்பாளர்நோக்கியா
நவம்பர் 2011 (ஐரோப்பா)
திசம்பர் 2011
திரை3.7 in. கிளையர்பேக் அமொலெட் பென்டைல்[1] மின்தேக்கு தொடுதிரை
480x800 பிக்ஸ் 16மி-வண்ணம்அகண்ட விஜிஏ
கேமரா8 மெகாபிக்சல், 3264x2448 பிக்சல்கள், இரட்டை-எல்ஈடி ஒளிர்வி, தானிக்குவிப்பு கார்ல் சீயெஸ் ஒளிச்சுழல்
இயங்கு தளம்விண்டோசு தொலைபேசி 7.5
உள்ளீடுபன்முக-தொடுகை மின்தேக்கு தொடுதிரை, அருகாமை உணர்வி, குறைஒளி உணர்வி, 3-அச்சு விரைவு மாற்றமானி, எண்மிய திசைகாட்டி
CPU1.4 கிகாஹெர்ட்ஸ் குவால்காம் MSM8255T இசுகார்ப்பியன்
நினைவகம்16 GB உள்ளகம் திடீர்
512 MB ரோம்
512 MB ரேம்
பிணையங்கள்ஜிஎஸ்எம், எச்எஸ்டிபிஏ, ஒய்-ஃபை, 3ஜி
தொடர்பாற்றல்புளூடூத் 2.1, 802.11b/g/n, G-Sensor, Digital Compass, dual mode A-GPS/குளொனொஸ், micro-USB, 3.5mm audio jack
மின்கலன்Rechargeable 1520mAh Li-ion battery (Up to 265 h (2G) / Up to 335 h (3G) standby, Up to 13 h (2G) / Up to 9 h 30 min (3G) talk time, Up to 55 h music play)
அளவு116.5 x 61.2 x 12.1mm
எடை142 கிராம்கள்
முந்தையதுநோக்கியா லூமியா 710
பிந்தையதுநோக்கியா லூமியா 900
தொடர்புள்ளவைநோக்கியா N9
மேம்படுத்தல் நிலைஅண்மைய வெளியீடு

மேற்கோள்கள் தொகு

  1. Sakr, Sherif. "Nokia Lumia 800 review". Engadget. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
  2. Toor, Amar. "Nokia announces the Lumia 800". Engadget. பார்க்கப்பட்ட நாள் 26 October 2011.
  3. Nokia unveils first Windows Phone Netzwelt, retrieved 27 அக்டோபர் 2011 (செருமன்)
  4. Nokia's Lumia 800 gets UK release date and pricing | ZDNet UK
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா_800&oldid=2923488" இலிருந்து மீள்விக்கப்பட்டது