நோய்க் கிருமிக் கோட்பாடு

நோய்க் கிருமிக் கோட்பாடு (Germ theory of disease) என்பது மனிதருக்கு உண்டாகும் பல நோய்கள் நுண் கிருமிகளால் உண்டாக்கப்படுபவை என்ற கோட்பாடு ஆகும். இந்தக் கோட்பாடு 19ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று மிக உறுதியாக இது நிறுவப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தின் முக்கிய கோட்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.