நோய்நீக்கல் குறியீட்டெண்

நோய்நீக்கல் குறியீட்டெண் (therapeutic index) என்பது ஒரு மருந்தின் நோய்நீக்கும் அளவையும் அதே மருந்து மனித உடலில் நச்சுத்தன்மை உண்டாக்கும் அளவையும் ஒப்புமைப்படுத்துவதாகும்.

இது 50 விழுக்காட்டு மக்களில் நச்சுத் தன்மை உண்டாக்கும் மருந்தின் அளவை (TD50), 50 விழுக்காட்டு மக்களில் நோய்நீக்கும் குறைந்தபட்ச பயனுறு மருந்தளவால் (ED50) வகுக்கக் கிடைப்பதாகும்.

ஒரு மருந்தின் நோய்நீக்கல் குறியீட்டு எண் குறைவாக இருந்தால் அது கவனமாகத் தரப்பட வேண்டிய மருந்தாகும். இந்த மருந்துகளின் அளவைக் கட்டுப்படுத்தி மனித உடலுள் செலுத்த வேண்டும்.