பசீர் அகமது கான்

இந்திய ஆட்சிப் பணியாளர்

பசீர் அகமது கான் (Baseer Ahmad Khan ) 2000 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். தற்போது இவர் சம்மு காசுமீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசகராக பணிபுரிகிறார்.

பின்னணி தொகு

2009 ஆம் ஆண்டில் கான் பாரமுல்லாவின் துணை ஆணையராக இருந்தபோது குல்மார்க் நில முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.[1] டிசம்பர் 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் மார்ச் 2013 வரை சிறீநகர் மாவட்டத்தின் துணை ஆணையர் பதவியில் இருந்தார்.[2] காசுமீரின் கோட்ட ஆணையாளராக இருந்த இவர் 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 அன்று மேலதிக வயதை எட்டியபோதும் அரசாங்கம் இவரது சேவையை மேலும் ஒரு வருடம் நீட்டித்தது. ஆனால் இவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர், சம்மு-காசுமீரின் துணைநிலை ஆளுநர் முர்முவின் நான்காவது ஆலோசகராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.[3][4][5] ஓர் ஆலோசகராக இவர் சக்தி மேம்பாடு, கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராச், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மலர் வளர்ப்பு போன்ற இலாகாக்களை நிர்வகிக்கிறார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Ahmad, Mudasir (16 March 2020). "J&K: Baseer Khan, Accused in Gulmarg Land Scam, Appointed as Advisor to Lt Governor". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Former Deputy Commissioners | District Srinagar, Government of Jammu and Kashmir | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
  3. Sharma, Arun (2020-03-16). "Gulmarg scam accused Baseer Ahmad Khan to be J&K L-G's adviser". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. IANS (15 March 2020). "Baseer Ahmad Khan made advisor to J&K L-G". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Baseer Ahmad Khan, IAS, appointed as J&K adviser" (in en-IN). The Hindu. 2020-03-15. https://www.thehindu.com/news/national/other-states/baseer-ahmad-khan-ias-appointed-as-jk-adviser/article31075592.ece. 
  6. "KAS Officer Bio Data". jkgad.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீர்_அகமது_கான்&oldid=3057331" இலிருந்து மீள்விக்கப்பட்டது