பசுமாசுரன்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் பசுமாசுரன் (Bhasmasura; சஸ்கிருதம்:भस्मासुर, பஸ்மாசுரன்) என்பவர் சிவனிடம் வரம் பெற்ற அரக்கனாவார்.

பஸ்மாசுரன் - மோகினி, மரத்தின் மறைவில் சிவபெருமான்

வரலாறு தொகு

விஷ்ணு புராணத்தில் மோகினி பஸ்மாசுரனை அழித்தமை பற்றி கூறப்பட்டுள்ளது.

அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கைவைத்தால் அவர்கள் சாம்பல் ஆகும் வரத்தினைப் பெற்றார். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரைத் துரத்தினார்.

அந்நேரத்தில் திருமால் மோகினி அவதாரம் எடுத்து பசுமாசுரனை தனது அழகினால் மயக்கி காமம் கொள்ளச் செய்தார். மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும் படி கூறி, மோகினி ஆடினாள். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினை மறந்து தலையில் கைவத்தார். சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் அழிந்தார்.[1]

காண்க தொகு

ஆதாரம் தொகு

  1. http://tamil.nativeplanet.com/yana/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமாசுரன்&oldid=3838066" இலிருந்து மீள்விக்கப்பட்டது