படம்சார் தகவல் தொடர்பு

படம்சார் தகவல் தொடர்பு என்பது படங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. இது, தரவுகள், கருத்துருக்கள், உணர்வுகள் என்பவற்றைப் பிறருக்குத் தெரிவிப்பதற்காக; சொற்களையும், படிமங்களையும் கொண்ட பொருட்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கியது. இதனால், படம்சார் தகவல் தொடர்புத் துறை ஒரு எண்ணம் உருவாவதில் இருந்து அதன் மூலம் உருவாக்கப்படும் பொருளை முடிப்புச்செய்து, அதனை இரு பரிமாண, அல்லது முப்பரிமாணப் பொருளாகவோ மின்னணுக் கோப்பு வடிவிலோ வழங்கும் வரையிலான வழிமுறைகளின் எல்லாப் படிகளையும் உள்ளடக்குகிறது.

படம்சார் தகவல் தொடர்பில், வரைபடங்கள், ஒளிப்படங்கள், பட வில்லைகள், ஒளிபுகவிடும் படப்பதிவுகள் போன்ற பட வகைகள் பயன்படுகின்றன. சிறுவர்களின் படங்கள், வழி காட்டுவதற்காகப் பருமட்டாக வரையப்படும் படங்கள் முதலியனவும், ஒரு தகவலையோ எண்ணத்தையோ படங்கள் மூலம் தெரிவிப்பன ஆதலால் இவையும் படம்சார் தகவல் தொடர்பு சார்ந்தனவே.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படம்சார்_தகவல்_தொடர்பு&oldid=1354367" இலிருந்து மீள்விக்கப்பட்டது