படியெடுத்தலுக்கு எதிரான சட்டம், 1992

படியெடுத்தலுக்கு எதிரான சட்டம் (The Anti-Copying Act, 1992) என்பது 1992 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அப்போதைய மாநில முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்கினால் இயற்றப்பட்ட சட்டமாகும்.[1] அப்போது ராஜ்நாத் சிங் கல்வி அமைச்சராக இருந்தார். இந்தச் சட்டம் பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தேர்வின் போது படியெடுப்பதை (பார்த்து எழுதுவதை) தடுப்பதற்காக அந்த மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்தச் சட்டத்தின் மூலம் காவல் அதிகாரிகள் தேர்வு நடக்கும் வளாகத்தில் மாணவர்களை சோதனை செய்ய வழிவகை செய்தது.[2] ஆனால் 1993 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை முலாயம் சிங் யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்த போது இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.[3][4]

சான்றுகள் தொகு

  1. "Cheating system Mulayam Singh Yadav abolishes Anti-Copying Act in Uttar Pradesh". June 30, 1994. http://indiatoday.intoday.in/story/mulayam-singh-yadav-abolishes-anti-copying-act-in-uttar-pradesh/1/293561.html. பார்த்த நாள்: 6 December 2015. 
  2. "How students 'copying' in exams became an issue for the BJP in the early 90s". தி நியூஸ் மினிட். 23 March 2015 இம் மூலத்தில் இருந்து 16 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181016141014/https://www.thenewsminute.com/politics/1582. பார்த்த நாள்: 16 October 2018. 
  3. Pradhan, Sharat (7 February 2001). "UP Govt to challenge order against Anti-copying Act". Rediff.com. http://www.rediff.com/news/2001/feb/07up1.htm. 
  4. Chakraborty, Tapas (20 February 2015). "IAS officer turns anti-copying crusader". The Telegraph (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.