பட்னா தலைமைச் செயலகம்

பட்னா தலைமைச் செயலகம் (Patna Secretariat) இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் நிர்வாக அலுவலகமாகும். பட்னா சச்சிவாலயா அல்லது பழைய தலைமைச் செயலகம் என்றும் இது அழைக்கப்படுகிறது. பீகாரின் தலைநகரமான பட்னாவில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. பட்னா நகரின் அடையாளச் சின்னங்களாக விளங்கும் மேற்கில் ஆளுநர் மாளிகை மற்றும் தூர கிழக்கில் உள்ள பட்னா உயர் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் இத்தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. [1]

பட்னா தலைமைச் செயலகம்
Patna Secretariat
पटना सचिवालय
1940 ஆம் ஆண்டில் பட்னா தலைமைச் செயலகம்
Map
பொதுவான தகவல்கள்
வகைஅரசு கட்டடம்
இடம்பட்னா, பீகார், இந்தியா
ஆள்கூற்று25°21′43″N 85°39′32″E / 25.3619°N 85.659°E / 25.3619; 85.659
கட்டுமான ஆரம்பம்1913
நிறைவுற்றது1917
உரிமையாளர்பீகார் அரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)யோசப் பி. முன்னிங்சு
மேம்பாட்டாளர்மார்ட்டின் பர்ன்

அமைவிடம் தொகு

பட்னா தலைமைச் செயலகம் பட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கிழக்கில் அமைந்துள்ளது. வலிமையான இக்கட்டடம் பிரித்தானிய அரசியான விக்டோரியாவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. [2] இந்திய இசுலாம் மற்றும் இந்தியக் கட்டிடக் கலை ஆகியவறை இணைத்து உருவாக்கப்பட்ட இந்தோ- சார்செனிக் கட்டிடக் கலையைப் பயன்படுத்தி பிரித்தானியர்கள் 1917 ஆம் ஆண்டு தலைமைச் செயலக கட்டடத்தைக் கட்டி முடித்தனர். [3] 716 அடி நீளம் 364 அடி அகலம் கொண்டு நகரத்தின் மிகப்பெரிய அரசாங்க கட்டிடங்களில் ஒன்றாக பீகார் தலைமைச் செயலகக் கட்டடம் நிற்கிறது. இங்குள்ள அழகிய மற்றும் பச்சை புல்வெளிக்கு இடையே ஒரு பெரிய மணிகூண்டு கடிகார கோபுரம் உயரமாக நிற்கிறது. [4] முதலில்198 அடி உயரம் கொண்டதாக இருந்த கோபுரம் 1934 ஆம் ஆண்டு நிகழ்ந்த நேபாளம்-பீகார் பூகம்பத்தின் போது இதன் ஒரு பகுதி கீழே உடைந்து விழுந்தது. தற்போது கோபுரத்தின் உயரம் தரையில் இருந்து 184 அடிகளாகும். கருங்கற்காரை தளத்திற்கும் ஓடுகளின் மேற்புற மூடுதலுக்கும் இடையில் நான்கு அடி இடைவெளி விடப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் உட்புறங்களில் வெப்பநிலையை குறைத்து காட்டுவதை இந்த இடைவெளி உறுதி செய்கிறது. [5]

பட்னா தலைமைச் செயலக வளாகத்தில் புல்வெளிகள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பீகாரின் முதல் முதலமைச்சரான சிறீ கிருட்டிணா சின்காவின் வெண்கல சிலை புல்வெளிக்கு மேற்கிலும், 1942 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஏழு மாணவர்கள் தியாகம் செய்ததை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட்ட தியாகிகள் நினைவுச்சின்னம் போன்றவை அலங்காரத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும். பட்னா தலைமைச் செயலக கட்டிடம் பாட்னா நகரின் குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் ஒன்றாகும். கட்டிடக்கலைச் சிறப்பிற்கும் இக்கட்டடம் பெயர் பெற்றதாகும்.

சிறப்புகள் தொகு

சிட்னியின் பிரபல கட்டிடக் கலைஞர் யோசப் முனிங்சால் வடிவமைக்கப்பட்டு கல்கத்தாவின் மார்ட்டின் பர்ன் என்பவரால் 1913 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பட்னா தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. [6] பட்னா நகரத்தின் வேறு எந்த வரலாற்று கட்டிடமும் இதனைப் போன்று உயரமான கடிகார கோபுரம் இல்லாமல் இருப்பதால் இது தனித்து வேறுபடுகிறது. இன்று, பீகார் மாநில அரசின் தலைமைச் செயலகமாக இயங்குகிறது. அனைத்து வகையான அரசாங்க நடவடிக்கைகளும் கொண்ட ஒரு பரப்பரப்பான வளாகமாக செயல்படுகிறது. [7] உள்துறை, நிதி, பொது நிர்வாகம், அமைச்சரவையின் செயலகம் போன்ற அனைத்து முக்கியமான அரசுத் துறைகளும் இங்கு அமைந்துள்ளன. எனவே அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய அலுவலகங்களும் இங்கு செயல்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Sachivalaya". PatnaPedia. 8 அக்டோபர் 2012. Archived from the original on 24 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.
  2. Piyush Kumar Tripathi (23 அக்டோபர் 2013). "Speed corridors on track". Telegraphindia.com. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.
  3. "Patna Secretariat in Patna India". India9.com. 7 சூன் 2005. Archived from the original on 22 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.
  4. Hindustan times – Sun 29 Aug 2010 (29 ஆகத்து 2010). "Airport Authority of India to downsize Patna 'Clock Tower' - Yahoo News India". In.news.yahoo.com. Archived from the original on 2 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. Abhay Singh, TNN & Agencies (2012-06-14). "Majestic seat of real power - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2014-02-17. பார்க்கப்பட்ட நாள் 2014-02-17.
  6. "Landmarks". Patna.bih.nic.in. 22 மார்ச்சு 1912. Archived from the original on 14 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.
  7. "CM Inaugurates Work on 500 Panchayat Bhawans". PatnaDaily.Com. 13 பெப்பிரவரி 2014. Archived from the original on 24 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_தலைமைச்_செயலகம்&oldid=3561617" இலிருந்து மீள்விக்கப்பட்டது