பதிலித்தாய் முறை (நெறிப்படுத்தும்) சட்ட முன்வடிவு 2016

பதிலித்தாய் முறை (நெறிப்படுத்தும்) சட்ட முன்வடிவு 2016 (The Surrogacy (Regulation) Bill 2016) என்பது இந்தியப் பெண்கள் பதிலித்தாய் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டு குழந்தைகள் பெறுவதைத்  தடை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து இன்னொரு கருப்பையில் வைத்து வளர்க்கும் முறையானது பதிலித்தாய் முறையாகும். குழந்தையின்மைக்கான  சிகிச்சையின் இறுதி முயற்சிகளில் இது ஒன்று. இச்சட்ட முன்வடிவிற்கு நடுவணரசு அமைச்சரவை ஆகத்து 24, 2016 அன்று ஒப்புதலளித்து உள்ளது. இச்சட்ட முன்வடிவு பதிலித்தாய் முறை வணிகமயமாக்கப் படுவதைத் தடை செய்கிறது.[1]

முகவுரை தொகு

 
தாயும் சேயும்

2008 ஆம் ஆண்டு குசராத்து மாநிலம் அகமதாபாது நகரில் சப்பானிய ( Japanese) தம்பதி ஒன்று, பிரதி பென் மேத்தா என்னும் பெண்ணை பதிலித்தாயாக நியமித்து முன்பணம் செலுத்திவிட்டு சப்பான் சென்ற அந்த தம்பதியினர் குழந்தை பிறக்கும் முன்பே விவாக ரத்து செய்து கொண்டனர். பிறந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற சட்டச் சிக்கல் எழுந்து நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. தாய் குழந்தையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். குழந்தை எந்த நாட்டையும் சேராமல் குடியுரிமையின்மையாலும் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றம் குழந்தை ‘மாஞ்சி யமதாவை’ அதன் பாட்டியிடம் ஒப்படத்தது. குசராத்து உயர் நீதி மன்றம் இது குறித்து அரசு, சட்டம் இயற்ற வேண்டியதின் அவசரத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தியது.[1]

2012 ஆம் ஆண்டுஆசுத்திரேலிய தம்பதியர் ஒருவருக்கு ஒரு பதிலித்தாய் இரடைக்குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார். பெற்றோர் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு மற்றொரு குழந்தையை எக்காரணமுமின்றி நிராகரித்து விட்டனர்.[2]

சென்னையைச் சேர்ந்த ஒரு தாய் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தபின் பேசிய பணத்திலிருந்து பாதி பணம் மட்டுமே பெற்றுக் கொண்டார். மீதி தொகையை இடைத்தரகர் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக அத்தாய் மிகவும் அவதியுற்றார்.

புது டில்லியில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சனவரி 29, 2014 அன்று   யுமா செர்பா என்னும் 26 வயதுப் பெண் முட்டை தானத்திற்காக அறுவை சிகித்சை செய்யப்படும் பொழுது உயிரிழந்தார்.[2]

சட்ட ஆணையம்  தமது 228 ஆம் அறிக்கையில் பதிலித் தாய் முறை வணிகமயமாக்கப்படுவதைத் தடை செய்து, தகுதி வாய்ந்த இந்தியப் பெற்றொர் மட்டும் சேவை மனப்பான்மையுடன் முன்வரும் பதிலித் தாய்மார்கள் மூலம் இம்முறையை அனுசரிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசிற்குப் பரிந்துரை செய்தது [1][2]

2002 ஆம் ஆண்டு பதிலித்தாய் முறையை வணிக நோக்கில் அனுமதித்த முதல் நாடாக இந்தியா இருந்தது. 2012 ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் பதிலித் தாய் முறையின் தலை நகரம் என்று பெயர் பெறும் அளவு வணிக நோக்கில் இம்முறை தவறாகச் செயல் படுத்தப் பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு சுமார் 50 கோடி டாலர் இதில் புழங்கியது.என்று அனில் மல்கோத்ரா என்பவர் ‘All aboard for the fertlity express’ என்னும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.[1]

முக்கிய அம்சங்கள் தொகு

 
உறவினருடன் குழந்தை
  • குழந்தையை  விரும்பும் பெற்றொர்களும்  அவர்களின் கருவைச் சுமக்க சம்மதிக்கும் பெண்ணும் முறையாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்
  • கர்ப்பத்தின் முதல் மாதத்திலுருந்து  பிரசவ காலம் வரை  ஒரு வருட காலத்திற்கான மொத்த செலவையும் பெற்றொர் பொறுப்பேற்க வேண்டும்.
  • உணவு உடை, மருத்துவச் செலவிற்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும்
  • குழந்தையைப் பெறும் பெண் ஏழாவது மாதத்திலேயயே மருத்துவ மனையில் சேர்ந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்
  • வாடகைத்தாயை அமர்த்திய பெற்றொர்களுக்கு பிரசவ தேதியும் நேரமும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.  நாளையும் நேரத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம அவர்களுக்கு உண்டு.
  • அவர்களது உத்தரவைப் பெற்று அறுவை சிகித்சை செய்து குழந்தையை வெளியே எடுப்பார்கள்
  • குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்கு அதனைப்  பெற்ற தாய் பாலூட்ட வேண்டும்..
  • ஒப்பந்த நாளில் குழந்தையை பெற்றொரிடம் ஒப்படைக்க வேண்டும்
  • இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத, குழந்தை இல்லாத பெற்றொர் மட்டும் தான் இம்முறையைப் பயன் படுத்த முடியும்.
  • பதிலித் தாய்க்கு 25 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் [2]
  • நெருங்கிய உறவினர் மட்டும் தான் பதிலித்  தாய்மார்களாக இருக்க முடியும். இரத்த சம்பந்தம் தேவை இல்லை.[3]
  • இதற்காக இவர்கள் பணம் எதுவும் வாங்கக்கூடாது.
  • இவர்கள் இதனை ஒரு முறை மட்டும் தான் செய்ய முடியும்.
  • வெளி நாட்டவர்கள், ஓரினச்சேர்கையாளர்கள், திருமணமின்றி ஒன்றாக வசிப்பவர்கள், தனி நபர்கள் முதலியோர் தகுதியற்றவர்கள்.  
  • திருமணம் முடிந்து ஐந்து வருடம் குழந்தை இல்லாத இந்தியப் பெற்றொர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்
  • மருத்துவ உதவி செய்யும் மருத்துவ மனைகள் பதிவு  செய்து கொள்ள வேண்டும்.
  • சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 லட்சம் உரூபாய் அபராதமும் விதிக்கப் படலாம்

குறைகள் தொகு

  1. மகப்பேறு நிபுணர்களும் , கருவுறு திறன் நிபுணர்களும் (Fertility Specialists) [1] குழந்தை இல்லாதவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு எனவும் இதனைத் தடை செய்வது முறையாகாது எனவும் கூறுகின்றனர்.
  2. சேவை மனப்பான்மையுடன் மட்டும் பதிலித் தாய் சம்மதிக்கவேண்டும், பணத்திற்காக இருக்கக் கூடாது என்பது பொருத்தமற்ற நடை முறைக்கு ஒவ்வாத வாதம்.
  3. இது பதிலித்தாயின் மகப் பேறு உரிமைக்கு எதிரானது.
  4. இச்சட்ட முன்வடிவு முட்டை தானத்தையும் தடை செய்கிறது. ஆதலால் கருவுறு திறன் மருத்துவத்திற்கு  பெறிய இடையூறு ஏற்படும்.
  5. கர்ப்பப் பை இல்லாத ஒரு சில மகளிரின் உரிமையைப் பறிக்கும் செயலாகும் இது.
  6. பதிலித் தாய் முறை பணத்திற்காகச் செய்யப் படும் சேவை என்று கொள்ள வேண்டும், இதில் என்ன தவறு இருக்க முடியும், இதற்கு சட்ட முன்வடிவில் விளக்கம் இல்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 The Hindu, August 25, 2016, page 1 & 12, Union Cabinet Clears surrogacy Bill
  2. 2.0 2.1 2.2 2.3 The Hindu, Sunday, August 28, 2016, Page 8, Insight: Why the Surogacy Bill is necessary
  3. http://indiatoday.intoday.in/education/story/surrogacy-bill/1/749353.html பரணிடப்பட்டது 2016-08-27 at the வந்தவழி இயந்திரம் | பார்த்த நாள்  ஆகத்து 28, 2016