பத்மசாலியர்


பத்மசாலியர் (Padmasaliyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[1] இவர்கள் தங்களை பத்மபிராமின் என்று அழைத்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[2]

பத்மசாலியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சாலியர்

தொழில் தொகு

இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[3]

வாழும் பகுதிகள் தொகு

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், வேலூர், தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் கள்ளக்குறிச்சி, சென்னை - பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய மாவட்ட பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Eveline Kumar Suresh Singh, ed. (2004). People of India - Volume 40, Part 2. ‎Anthropological Survey of India. p. 1125. The mother-tongue of the Padmasaliyar is Telugu, but they speak Tamil with others
  2. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  3. ச வே.சுப்பிரமணியன், ed. (1999). நெல்லை மாவட்டத் தமிழாளர். உலகத் தமிழ்க் கல்வி இயக்கம். p. 217. இப் பத்மசாலியர் பட்டு நூல் நெசவு போன்ற தொழில்களைச் செய்து வரும் தமிழ் மக்களாவர் . இவர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து குடி பெயர்ந்துள்ளனர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசாலியர்&oldid=3419175" இலிருந்து மீள்விக்கப்பட்டது