பத்மா யாஞ்சன்

பத்மா யாஞ்சன் (Padma Yangchan) என்பவர் லடாக்கை சேர்ந்த ஒரு இந்தியத் தொழிலதிபர். இவர் ஆடை வடிவமைப்பாளராகப் பயிற்சி பெற்றார். பத்மா நம்சா உயர்தர உடையலங்காரம் மற்றும் நம்சா டைனிங்கின் உரிமையாளராக உள்ளார். மேலும் லடாக்கின் உள்நாட்டுக் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுக்குப் புத்துயிர் அளிப்பதில் பெயர் பெற்றவர். இவரது சாதனைகளைப் பாராட்டி நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

Woman receives award from Indian president
பத்மா யாஞ்சன் ராம்நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி விருது பெறுகிறார்

தொழில் தொகு

பத்மா யாஞ்சன் 1991-ல் இந்தியாவின் வட பகுதியான லடாக்கில் பிறந்தார். இவர் சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தில்லி மற்றும் இலண்டனில் ஆடை வடிவமைப்பு படிப்பை முடித்தார். லடாக்கிற்குத் திரும்புவதற்கு முன், தில்லி, லண்டன் மற்றும் மும்பையில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.[1][2] இவரது வணிக கூட்டாளியான ஜிக்மெட் டிஸ்கெட் உடன், யாங்சான் 2016-ல் நாம்சா கோட்யூர் என்ற ஆடை நிறுவனத்தை நிறுவினார்.[1] இது பாரம்பரிய உள்ளூர் ஜவுளிகளான பஷ்மினா மற்றும் செம்மறி ஆடு (லடாக்கி: நம்பு), (லடாக்கி: குளு) யாக் மற்றும் ஒட்டகம் போன்ற கைவினை மேற்சட்டைகள் மற்றும் தொப்பிகளை உருவாக்கப் பயன்படுத்துகிறது.[3][1]வெங்காயம், சூரியகாந்தி மற்றும் ரோஜாக்களைப் பயன்படுத்தி இந்நிறுவனம் சொந்தமாக ஆடைக்கான நிறங்களைத் தயாரிக்கிறது.[4]

2019-ல் இலண்டன் அழகு நய வாரத்தில் இந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.[5] நாம்சா லேயில் ஒரு கடையை வைத்திருக்கிறார். இது உயர்தர ஆடைகளை விற்பனை செய்கிறது. மேலும் லடாக்கி கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் லடாக்கின் இழந்த உணவு வகைகளின் அனுபவங்களையும் கொண்டுள்ளது.[5][2] அனைத்துலக பெண்கள் நாளான 2022 அன்று, இவரது சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாரி சக்தி விருது வழங்கினார்.[6]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_யாஞ்சன்&oldid=3681008" இலிருந்து மீள்விக்கப்பட்டது