பனப்பாக்கம் அனந்தாச்சார்லு

இந்திய அரசியல்வாதி

பனப்பாக்கம் அனந்தாச்சார்லு (Panapakkam Anandacharlu, 5 ஆகத்து 1843 - 4 சனவரி 1908) [1] என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர். இவர் 1891 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் மாநாட்டின் தலைவராக இருந்தார்.

பனப்பாக்கம் அனந்தாச்சார்லு
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்
முன்னையவர்பெரோஸ்ஷா மேத்தா
பின்னவர்உமேஷ் சந்திர பானர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 ஆகத்து 1843
கட்டமஞ்சி, சித்தூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 சனவரி 1908 (64 வயது)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கனகவள்ளி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அனந்தாச்சார்லு மதறாஸ் மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் கட்டமஞ்சி என்ற சிற்றூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே மதறாசுக்கு குடிபெயர்ந்த இவர், கயாலி வெங்கடபதி என்ற முன்னணி மதறாஸ் வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார். 1869 இல் மதறாஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

சட்ட வாழ்க்கை தொகு

1869 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக சேர்ந்த பிறகு விரைவில் அனந்தாச்சார்லு முக்கியமான ஒரு வழக்கறிஞராக உருவெடுத்தார். 1899 ஆம் ஆண்டு இவரது அறையில்தான் மதறாஸ் வழக்கறிஞர்கள் சங்கம் துவக்கபட்டது.

அனந்தாச்சார்லு ராய் பகதூர் ஆக்கப்பட்ட தகவல் உள்ளது. மேலும் இவருக்கு 1897 இல் சிஐஇ (இந்தியப் பேரரசின் தோழன்) என்ற கௌரவும் வழங்கப்பட்டது.

அரசியல் வாழ்க்கை தொகு

அனந்தாச்சார்லுவுக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியலிலும் பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் இருந்தது. நேட்டிவ் பப்ளிக் ஒபினியன் மற்றும் மதராசி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார். 1878 ஆம் ஆண்டில், [[தி இந்து]வைத்] தொடங்குவதில் ஜி. சுப்பிரமணிய ஐயர், சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் ஆகியோருக்கு உதவினார், மேலும் அதில் அவ்வப்போது எழுதி வந்தார்.

இவர் 1884 இல் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தையும் (அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்), மதறாஸ் மகாஜன சபையையும் நிறுவினார். 1885 இல் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் கலந்துகொண்ட 72 பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். இவர் 1891 இல் இந்திய தேசிய காங்கிரசின் நாக்பூர் மாநாட்டில் கலந்துகொண்டார், அதில் இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1906ல் காங்கிரசு பிளவுபட்டபோது இவர் மிதவாதிகளின் பக்கம் இருந்தார். இருப்பினும், பிரிந்த சில காலத்திலேயே இவர் இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "Past Presidents – P. Ananda Charlu". Indian National Congress. aicc.org.in. Archived from the original on 9 November 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.