பனாத்வாலா

இந்திய அரசியல்வாதி

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம். , பி.எட். படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.

பனாத்வாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-08-15)ஆகத்து 15, 1933
மும்பை
இறப்புசூன் 26, 2008(2008-06-26) (அகவை 74)[1]
மும்பை
அரசியல் கட்சிஇந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
துணைவர்ஆயிசா
வாழிடம்மும்பை
As of சூன் 26, 2008
மூலம்: [1]

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் மும்பையில் 2008ஆம் ஆண்டு சூன் 26 அன்று காலமானார்.

ஆதாரம் தொகு

  1. "Muslim League chief Banatwala dies".
  2. "parliamentofindia". பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாத்வாலா&oldid=3279244" இலிருந்து மீள்விக்கப்பட்டது