பன்சிர் ஆறு

ஆப்கானித்தானில் பாயும் நதி

பன்சிர் ஆறு ( Panjshir River ) ஆப்கானித்தானின் காபுலுக்கு வடக்கே 150 கிலோமீட்டர்கள் (93 மை) உள்ள பன்சிர் சமவெளி வழியாக பாய்கிறது. பர்வான் மாகாணத்தில் பாய்ந்து, பாக்ராம் மாவட்டத்தில் சாரிகாருக்கு கிழக்கே 10 கிமீ தொலைவில் ஓடும் கோர்பண்ட் ஆறு இதன் முக்கிய துணை ஆறாகும். பன்சிர் ஆறு அஞ்சுமான் கணவாய்க்கு அருகில் அதன் நீரை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி இந்து குஃசு வழியாக பாய்ந்து சுரோபி நகரில் காபூல் ஆற்றுடன் இணைகிறது.[1] பன்சிர் ஆற்றில் இருந்து காபுல் ஆற்றுக்கு தண்ணீர் வழங்குவதற்காக 1950களில் சுரோபிக்கு அருகில் பன்சிர் ஆற்றின் மீது ஒரு அணை கட்டப்பட்டது..[2] பாக்ராம் விமான நிலையத்திற்கு செல்ல பன்சிர் ஆற்றில் ஒரே ஒரு நிரந்தர பாலம் உள்ளது.[3][4] 12 சூலை 2018 அன்று, பன்சிர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பத்து பேர் இறந்தனர்.[5][6]

பன்சிர்
பன்சிர் ஆறு is located in ஆப்கானித்தான்
பன்சிர் ஆறு
ஆப்கானித்தனில் மன்சிர் ஆற்றுன் முகத்துவாரம்
அமைவு
நாடுஆப்கானித்தான்
நகரம்பாக்ராம்
சிறப்புக்கூறுகள்
மூலம்இந்து குஃசுமலைத்தொடர்கள்
 ⁃ அமைவுபாஞ்ச்சிர் சமவெளி, ஆப்கானித்தான்
 ⁃ ஆள்கூறுகள்35°41′18″N 70°05′14″E / 35.6882°N 70.0871°E / 35.6882; 70.0871
முகத்துவாரம்காபுல் ஆறு
 ⁃ அமைவு
சுரோபி, காபுல் மாகாணம், ஆப்கானித்தான்
 ⁃ ஆள்கூறுகள்
34°39′N 69°42′E / 34.650°N 69.700°E / 34.650; 69.700
வடிநில அளவு12963.7 sq km
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுகோர்பந்த் ஆறு

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Description of Watersheds Part IV" (PDF). aizon.org. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Pandjhir". Encyclopaedia of Islam (CD-ROM Edition v. 1.0). (1999). Leiden, The Netherlands: Koninklijke Brill NV. 
  3. Jalali, Ali Ahmad; Grau, Lester W. (2001). Afghan Guerrilla Warfare: In the Words of the Mjuahideen Fighters (in ஆங்கிலம்). Voyageur Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7603-1322-0.
  4. "Paddling in Panjshir: Afghanistan's geography attracts extreme sports buffs". National Post (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  5. "Story Map Journal". www.arcgis.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.
  6. "Panjshir River". www.cawater-info.net. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சிர்_ஆறு&oldid=3580455" இலிருந்து மீள்விக்கப்பட்டது