பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)

பன்னாட்டு நிதி மையம் (இரண்டு) (2 International Finance Centre) என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்ட ஒரு வானளாவி ஆகும். இதனைச் சுருக்கமாக "ifc" என்று அழைக்கிறார்கள். அத்துடன் இந்த வானளாவியின் சின்னமாகவும் ifc எனும் ஆங்கில சிறிய எழுத்துக்களையே கொண்டுள்ளது. இந்த வானளாவி ஹொங்கொங் தீவில், சென்ட்ரல் மாவட்டத்தில், சென்ட்ரல் நகரில் கடல் முகப்பில் அமைந்துள்ளது. இந்த வானளாவி, 2010 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்)‎ கட்டப்படும் வரை, இதுவே ஹொங்கொங்கில் உள்ள உயரமான வானளாவியாக இருந்தது. தற்போது இது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அத்துடன் உலகில் வானளாவிகளின் வரிசையில் 12 வது உயரமான வானளாவியாக இது உள்ளது.

பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)
2 International Finance Centre

2 பன்னாட்டு நிதி மையம், 2008 ஏப்பிரல் 5


தகவல்
அமைவிடம் ஹொங்கொங்
ஆள்கூறுகள் 22°17′6″N 114°9′33″E / 22.28500°N 114.15917°E / 22.28500; 114.15917
நிலை நிறைவு
தொடக்கம் 1997
கட்டப்பட்டது 19972003
திறப்பு 2003
பயன்பாடு பணிமனை, நிறுத்தகம், வணிகம்
உயரம்
Antenna/Spire 416.8 m (1,367.5 அடி)
கூரை 406.9 m (1,335.0 அடி)
கடைசித் தளம் 401.9 m (1,318.6 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 88
தளப் பரப்பு 185,805 m2 (1,999,988 sq ft)
உயர்த்தி எண்ணிக்கை 62, எண்ணிக்கை ஓட்டிசு மின்தூக்கி நிறுவனம்
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர்
Architect
Rocco Design Architects Limited
Design Architect
César Pelli & Association Architects
Executive Architect (Cladding)
Adamson Associates Architects
Developer IFC
References: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "2 International Finance Centre - SkyscraperPage.com". பார்க்கப்பட்ட நாள் 21 February 2008.

வெளியிணைப்புகள் தொகு