பயனர்:Divi.ratnam/மணல்தொட்டி

சீர் இணுவையூர்

இறையருளும் கலைவளமும் பொருள் வளமும் , கல்வி வளமும் நிறைந்த ஊர் இணுவில். இது யாழ்ப்பாணத்தின் அழியாப் புகழ் கொண்ட ஊர்.அதிகாலையில் கோவில் மணிகளும், சைவப்பாட்டுக்களும் கோவில்களில் கேட்கும். இந்த ஊர் மக்கள் இறைபக்தியுடன் திருநீரு தரிப்பர் இந்த ஊரில் பல சித்தர்களும் துறவிகளும் சைவத்தை வளர்க்கத்தோன்றினர். அனேகமக்கள் விவசாயத்தை மூலத்தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு ஏற்றுமதி பணப் பயிராக புகையிலை உள்ளது. மருதணார் மடம் சந்தையும் ஆஞ்சநேயர் கோவிலும் ஊர் எல்லையில் அழகு சேர்க்கிறது.உலகப்பெருமஞ்சம் கந்தசுவாமி கோயிலில் உள்ளது. மிகவும் பிரபலமான ஆலயங்கல் உள்ளன. பரராஐ சேகரப்பிள்ளையார் ஆலயம், கந்தசுவாமி கோயில், காரைக்கால்கோயில், சிவகாமி அம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோவில் போன்றவற்றை குறிப்பிடலாம்.இசையும், பரதமும் தலைத்தோங்கும் இடம். பல இசை வத்தகர்கள் வாழ்ந்தும் வாழ்ந்துகொண்டும் உள்ளனர். உதாரணமாக வீரமணி ஐயர், தட்சணா மூர்த்தி போன்றோறை குறிப்பிடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Divi.ratnam/மணல்தொட்டி&oldid=1869582" இலிருந்து மீள்விக்கப்பட்டது