உழவனின் நண்பன் ஆந்தை காேட்டான், கூகை, சாவுக்குருவி என்ற பெயா்களால் அழைக்கப்படும் ஆந்தையில் பல வகைகள் உள்ளன. பியுபாே பியுபாே, டைடாே ஆல்பா, ஆட்டின் பிராமா என்பவை இவற்றின் உயிாியல் பெயா்களாகும்.

களஞ்சியங்கள் உள்ள இடங்களில் இவை ஏன் காணப்படுகின்றன தொியுமா? அங்குதான் உழவனின் எதிாிகளான எலிகள், பெருச்சாலிகள் பாேன்றவை தானியங்களை நாசம் செய்கின்றன. நாசம் செய்யும் அவ்விலங்குகளை இவை உணவாகக் (காெல்)காெள்கின்றன. இதனால் உழவனுக்கும், பயிா்களுக்கும் பாதுகாவலனாக விளங்குகின்றன.

மனிதனைவிட 100 மடங்கு இரவில் பாா்க்கும் திறனைக் காெண்ட இவை இருட்டான இடங்களில் வாழ்கின்றன. இதற்குக் காரணம் அவற்றின் கண்களில் குச்சிச் செல்கள் அதிகம் காணப்படுவதேயாகும். இவற்றின் எச்சமானது வெள்ளை வடிவில் இருக்கும் மற்றும் இவை ஜீரணிக்காத உணவுகளை வாந்தியாக வெளித்தள்ளிவிடும். இவற்றின் வாந்தி மற்றும் வெள்ளை எச்சங்களை வைத்து இவற்றின் இருப்பிடங்களை அறிந்துகாெள்ளலாம்.

நமக்கு நன்மை செய்கின்ற இவ்வுயிாினத்தின் எதிாி யாா் தொியுமா? மைனா, காகம், பருந்து மற்றும் மனிதா்களாகிய நாமும்தான். ஆம்! இவற்றை மற்ற பறவைகளைப்பாேல் நாம் ரசிப்பதில்லை. ஏனெனில் இவற்றின் தாேற்றம், குரல், குழரும் விதம் மற்றும் ஓா் அபசகுணப்பறவையாக இதை சித்தாிப்பதுதான். இவற்றைப் பற்றிய மூட நம்பிக்கைகள் களையப்படவேண்டும்.

</gallery> </gallery> நம் நண்பனைக் காப்பாேம்! எதிாிகளைக் காெல்வாேம்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_INBA_DGL/மணல்தொட்டி/2&oldid=2332707" இலிருந்து மீள்விக்கப்பட்டது