பயனர்:TNSE thiruthaj KRR/மணல்தொட்டி 03

ஜவ்வு மிட்டாய் என்றவுடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனதிற்குள் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் சுவையின் வலிமை இந்த ஜவ்வு மிட்டாய்க்கு உண்டு.

ஜவ்வுமிட்டாயின் பொற்காலம் தொகு

30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜவ்வு மிட்டாய்தான் குழந்தைகள் விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்ற மிட்டாய் வகைகளில் ஒன்றாக வலம் வந்தது. விரும்பும் பண்டங்களைத் தேடிச் சென்று சாப்பிடக்கூடிய காலம் இதுவென்றாலும், அன்று நம்மைத் தேடிவந்த இனிப்பான தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜல்..ஜல் சத்தம் தொகு

தெருவில் ஜல்... ஜல் என்று பொம்மை கைதட்டுகிற ஓசைதான் இந்த ஜவ்வு மிட்டாயின் ஈர்ப்பு இசை. குழந்தைகளை மயக்கும் மந்திரம்.

வகைகள் தொகு

பொதுவாக பண்பு கருதி இந்த மிட்டாயை ஜவ்வு மிட்டாய்[1] என்று கூறினாலும் இந்த மிட்டாய் ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிறது.

  • பம்பாய் மிட்டாய்
  • ஜவ்வு மிட்டாய்
  • சவுக்கு மிட்டாய்
  • பொம்மை மிட்டாய்
  • பப்பர மிட்டாய்

மிட்டாய்க் கழி ( கம்பு ) தொகு

பல நிறங்கள் வரி வரியாக இருப்பது போல் இந்த ஜவ்வு மிட்டாய் ஒரு நீள மூங்கில் கழியில் (கம்பில்) சுற்றப்பட்டிருக்கும். இந்த மூங்கில் கழியின் உச்சியில்தான் பொம்மை ஒன்று பொருத்தப்பட்டு அந்த பொம்மைக்குப் பலவண்ணத்திலான ஆடையை அணிந்து வைத்திருப்பார்கள்.

கைதட்டும் பொம்மை தொகு

பொம்மையின் இரண்டு கைகளும் அசையுமாறு செய்யப்பட்டு இருக்கும். பொம்மையின் இரண்டு கைகளோடு பிணைக்கப்பட்ட கயிறு ஒன்று மூங்கில் கழியின் நடுவில் உள்ள துளையின் வழியே கொண்டுவந்து இறுதியில் ஒரு சிறிய வளையத்தோடு கட்டப்பட்டிருக்கும். மிட்டாய் விற்பவர் கால் கட்டைவிரலினை கீழ் உள்ள கயிற்று வளையத்தில் நுழைத்து அசைப்பதன் மூலம் கயிறு இழுக்கப்பட்டு பொம்மையின் கைகளில் பொருத்தப்பட்டுள்ள பித்தளைத் தகடுகள் முன்னும் பின்னும் நகர்ந்து ஒன்றோடு ஒன்று தொடுகிறபோது ஜல்...ஜல் என்ற சத்தம் தோன்றுகிறது. இதுவே ஜவ்வுமிட்டாயின் அழைப்போசையாகும்.

அரிதாகிப்போன ஜவ்வுமிட்டாய் தொகு

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் வீதிகளில் காணமுடிந்த ஜவ்வுமிட்டாய் இன்று திருவிழாக் காலங்களிலும்,பண்டிகை நாட்களிலும் மட்டுமே தான் அரிதாகக் காணமுடிகிறது. அக்காலங்களில் பள்ளிக்கூடப்பகுதிகளில் இந்த ஜவ்வுமிட்டாய்க்காரா்களைப் பரவலாகக் காணமுடியும்.இந்த மிட்டாயை வாங்குவதற்கு ஒரு கூட்டமே காத்திருக்கும்.

எவ்வளவு காசு தொகு

இன்று பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஜவ்வுமிட்டாய் அக்காலங்களில் 25 பைசாவிற்கும் 50 பைசாவிற்கும் மட்மே விற்கப்பட்டது. இதைக்கூட வாங்கமுடியாமல் வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு போகிறவர்களும் அன்று பலர் உண்டு.

மிட்டாயின் சுவை தொகு

அதிக தித்திப்பான இனிப்புடன் ஜவ்வுமிட்டாய் தயாரிக்கப்படும்.ஏனென்றால் இது குழந்தைகளைக் குறிவைக்கும் தின்பண்டமாகும். அளவிற்கதிகமான இனிப்பு என்ற ஒன்றைத் தவிர வேறெந்த சுவை அடையாளங்களும் இந்த மிட்டாய்க்குக் கிடையாது.

பல வடிவங்களில் ஜவ்வுமிட்டாய் தொகு

தேள் , பாம்பு , மோட்டார் வண்டி (பைக்) , மயில் , கைக்கடிகாரம் , நெக்லஸ் ( கழுத்தில் அணியும் அணிகலன் ) என மிட்டாய்க்காரர் பல வடிவங்களில் மிக விரைவாக ஜவ்வு மிட்டாயில் செய்து கொடுப்பார்.

இன்றைய விலைப் பட்டியல் தொகு

மயில்,தேள்,பாம்பு,மோட்டார் வண்டி,கைக்கடிகாரம் விரைவாகச் செய்யும் வடிவங்கள் ரூபாய் - 5.00
நெக்லஸ் செய்வதற்குச் சிறிது நெரமாகும் ரூபாய் - 10.00

மீசை இலவசம் தொகு

மிட்டாய் வாங்கும் குழந்தைகளை ஆர்வமூட்டும் வகையிலும் மீண்டும் தன்னிடமே வந்து வாங்க வரவேண்டும் என்ற வியபார உத்தியிலும் மிட்டாய் விற்பவர் கொஞ்சம் (கொசுரு) மிட்டாயை எடுத்து வாங்கும் குழந்தைகளின் கண்ணங்களிலும், மீசை போலும் ஒட்டிவிடுவார்.

மளிகைக் கடைகளிலும் இவ்வழக்கம் தொகு

அன்றைய காலங்களில் மளிகைக் கடைகளிலும் இதுபோன்ற வழக்கமுறையைக் காணமுடியும் அதாவது பொருள் வாங்கவரும் குழந்தைகளை மீண்டும் தமது கடைக்கே வரவழைக்க கடைசியில் கொஞ்சம் அவர்களுக்குப் பொட்டுக்கடலை, வெல்லம் கொடுப்பதுண்டு.

மிட்டாயின் தனித்துவம் தொகு

இந்தவகை மிட்டாய்கள் சாப்பிடும்போது சவக்.. சவக் என்று பற்களில் ஒட்டிக்கொள்ளும். பின்பு உமிழ்நீரோடு கலந்து விரைவில் கரைந்தும் போகும் தன்மை கொண்டதாகும்.

குழந்தைகளுக்குப் பெருமை தொகு

மிட்டாயை வாங்கிய குழந்தைகள் தின்பதற்கு முன்பாக தனக்கு மிட்டாய்க்காரர் செய்து கொடுத்திருக்கும் வடிவங்களை ( தேள்,பாம்பு,மோட்டார் வண்டி (பைக்) , மயில் , கைக்கடிகாரம் , நெக்லஸ் ) மற்றவர்களிடம் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டதற்குப் பின்பே சாப்பிடத் தொடங்குவார்கள். இச்செயல்பாடு இம்மிட்டாய்க்குக் குழந்தைகளிடம் இருக்கும் அளவிற்கதிகமான ஈர்ப்பைக் காட்டுவதாகும்.

மேற்கோள்கள் தொகு