பயனர் பேச்சு:Sivakumar/தொகுப்பு 2

chat request தொகு

siva, if u have a skype/msn/yahoo/gmail chat id, please let me know. I am interested to catch u in chat sometime to discuss our projects :) :) ! Or u can let me know ur phone number if u wish. please send the details to ravidreams_03 at yahoo dot com--ரவி 10:43, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

உருவாக்க வேண்டிய கட்டுரைகள் தொகு

சிவகுமார், அய்சால், டாமன், திஸ்பூர் ... முதலிய 8 இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் பற்றிய கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. அவை தொடர்பான தகவல்கள் ஆங்கில விக்கியிலும் இருப்பதால் அந்தத் கட்டுரைகளை உருவாக்கினால் நன்று. அவசியமற்ற பக்கங்களை நீக்கியமைக்கு நன்றி. --கோபி 17:40, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு மொழி பெயர்ப்பு உதவி தொகு

வார்ப்புரு:Infobox Film ஐ மொழி பெயர்க்க உதவுவீர்களா! இதனுடன் தொழிற்பட எனக்கு தொழில் நுட்ப அறிவு போதவில்லை. நன்றி --ஜெ.மயூரேசன் 08:51, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

சீன வானொலி தொகு

சீன வானொலிக் கட்டுரைகளுக்கான இணைப்புகள் நன்று. சீன வானொலித் தளத்தில் உள்ள ஒலிக்கோப்புகளை கேட்டுள்ளீர்களா? அவர்கள் உச்சரிப்பு வேடிக்கையாக இருக்கும். எனினும், அவர்கள் தளத்தின் தரம் வியக்க வைக்கிறது--ரவி 17:35, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு தொகு

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:23, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

கொள்கை கத்தரிக்காய் என்று :-) தொகு

--Natkeeran 22:25, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

குறுங்கட்டுரைகள் விரிவாக்கம் தொகு

சிவா, நீங்கள் உருவாக்கிய இந்திய நகரங்கள், அவதாரங்கள் போன்ற ஒரு வரிக்கட்டுரைகள் விரிவாக்கப்படாமலேயே உள்ளன. அவற்றைச் சிறிதளவாயினும் விரிவாக்க முடியுமா? Ganeshbot இயங்கத் தொடங்கினால் நகரங்கள் பற்றிய கட்டுரைகளை விரிவாக்குவது இலகுவாயிருக்கும். ஆனால் ஆளையே காணலை. கோபி 19:02, 10 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றி சிவா. சொன்னபடியே விரிவாக்கவும் தொடங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். --கோபி 15:47, 13 செப்டெம்பர் 2006 (UTC)Reply

தமிழிலும் Spell Checker தொகு

ஆங்கிலத்தில் உல்லது போல தமிழிலும் Spell Checker இருக்கிறதா. இன்னும் எழுத்து பிழை பழக்கம் விட மறுக்கிறது (பள்ளிப் பழக்கம் வீகி மட்டும்)!! -கேரளத் தமிழன் 21:57, 14 செப்டெம்பர் 2006 (UTC)Reply

கேரளத் தமிழரே இருக்கவே இருக்கின்றது ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள் என்றாலும் இதன் எழுத்துப் பிழைதிருத்தம் சுமாரானதுதான். வரும் பதிப்புக்களில் எழுதுப்பிழைதிருத்தம் மேம்படலாம்--Umapathy 22:31, 14 செப்டெம்பர் 2006 (UTC)Reply
உமாபதி! விறைவான பதிலுக்கு நன்றி -கேரளத் தமிழன் 14:46, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சமயி தொகு

சிவா, உங்கள் சந்தேகத்துக்கான பதிலை பேச்சு:பரதநாட்டியம் பக்கத்தில் பார்க்கவும். Mayooranathan 08:14, 22 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றி தொகு

சிவகுமார், என்னுடைய மீள்வருகைக்கு வரவேற்பு நல்கியதற்கு நன்றி. உங்களைப் போலவே, நண்பர்களின் கூட்டுழைப்பைக் கண்டு நானும் பன்மடங்கு ஊக்கம் உறுகின்றேன். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து நல்ல முறையிலே பங்கு கொள்ள வேண்டும். மிக வளர வேண்டிய பயன்மிகு பணி இது. --C.R.Selvakumar 14:00, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வாReply

steve irvin of tamil wikipedia :) தொகு

தமிழ் விக்கிபீடியாவின் steve irvin என்று உனக்குப் பட்டப் பெயர் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :) யானை, ஆடு, வங்காப் புலி...அடுத்து என்ன? கோரப்பட்ட கட்டுரைகளில் நிறைய விலங்குகள் பெயர் கொடுத்திருக்கிருக்கிறேன்..உருவாக்கித் தர வேண்டுகிறேன்..தொடர் பணிக்குப் பாராட்டுக்கள் ! −முன்நிற்கும் கருத்து Ravidreams (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குதிரைப் பேரினம் தொகு

குதிரை, கழுதை, வரிக்குதிரை இப்படி குதிரைப் பேரினம் அல்லது அப்படி எதாவது இருக்கா? --Natkeeran 15:16, 30 அக்டோபர் 2006 (UTC)Reply

உதவி தேவை - தமிழாக்கம் தொகு

'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:11, 29 நவம்பர் 2006 (UTC)Reply

எங்கே... தொகு

சிவகுமார், எங்கே, சில காலமாக இங்கே உங்கள் தடங்களைக் காணோம். வேலைப்பழு போல் இருக்கின்றது. நேரமிருந்தால், உங்கள் கருத்துக்களி Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி பகிருங்கள். நன்றி. --Natkeeran 02:47, 10 டிசம்பர் 2006 (UTC)

சும்மா தொகு

சிவா, மயில் படம் நல்லா இருக்கு..நானும் இந்தியாவில இருந்த ஆடு, மாடு, கோழின்னு நிறைய படம் பிடிச்சுக் கொண்டாந்து இருக்கேன். சீக்கிரம் எல்லாத்தையும் சிறப்புப் படமா போடலாம். அப்புறம், என்னைக்காசும் ஒரு நாள் சாயங்காலம் அழைக்கிறேன்.--Ravidreams 19:12, 4 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல் தொகு

சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:09, 16 பெப்ரவரி 2007 (UTC)

பயன்படாப் படிமங்கள் தொகு

சிவகுமார், பயன்படாப் படிமங்கள் பட்டியலில் [1] நீங்கள் பதிவேற்றிய சிலவும் உள்ளன. அவற்றில் தமிழ்விக்கிக்கெனவே நீங்கள் எடுத்த அல்லது உங்களிடம் பிரதிகள் இல்லாத ஆனால் முக்கியமான படிமங்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 18:14, 16 பெப்ரவரி 2007 (UTC)

தமிழர் தகவல்கள் வார்ப்புரு தொகு

({{தமிழர் தகவல்கள்}})
இந்த வார்ப்புரு இன்னும் ஒரு நல்ல நிலைமைக்கு வரவில்லை. தொடர்ந்து மாற்றங்கள் செய்து வருகின்றேன். சற்று சுருக்கவும் வேண்டும். இப்பொழுது ஒரு flux இல் இருக்கின்றது. இப்பொழுது கட்டுரைகளில் சேர்ப்பது நன்றோ என்று தெரியவில்லை. --Natkeeran 15:42, 17 பெப்ரவரி 2007 (UTC)

யானை கட்டுரை தொகு

சிவகுமாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த யானை கட்டுரையை கிக நேர்த்தியாய் வளர்த்தெடுத்துள்ளீர்கள். பல நல்ல கருத்துக்கள் சேர்க்க வேண்டியுள்ளன (இந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் - கால் நகம், துதுக்கிகை நுனி (இரண்டு நுனி, ஒருநுனி), காதுகளின் அமைப்பு, பழக்குவதில் உள்ள வேறுபாடுகள் முதலியன). பின்னர் வந்து எழுதுகிறேன். இப்பொழுது சுமார் 5-7 மணிநேரம் பங்குகொள்ள இயலாது. சிவகுமார் மீண்டும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இக்கட்டுரை சிறப்புக் கட்டுரையாக வடிவெடுக்க வேண்டும--செல்வா 16:53, 17 பெப்ரவரி 2007 (UTC)

விக்சனரிக்கு வருக தொகு

சிவா, விக்சனரியில் வௌவால், ஆந்தை, ஆவிகள் நடமாட்டம் அதிகமா இருக்கு..தனியா இருக்க பயமா இருக்கு..கொஞ்சம் அப்பப்ப வந்து போகவும் :)--Ravidreams 14:08, 3 மார்ச் 2007 (UTC)

Re: ஈரோடு மாவட்டம் தொகு

சிவா, நன்றி.. ஆனால், உண்மையில் ஈரோடு மாவட்டம் கட்டுரையில் நான் புதிதாக எதையுமே எழுதவில்லை. ஏற்கனவே நிறைய தகவல்கள் இருந்தது.. ஆனால், கட்டுரை அமைப்பு சரியாக இல்லை, அதைத் தான் சரி செய்ய முயல்கிறேன். --மது 17:49, 17 மார்ச் 2007 (UTC)

தமிழ்99 தொகு

அப்பாடா ஒரு ஆளையாச்சும் மாத்துனேனே :) வருங்காலத்தில் பெரும் அளவில் இதற்கான கொள்கைப் பரப்பில் இறங்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் :)--ரவி 18:53, 23 மார்ச் 2007 (UTC)

தமிழ்99க்கு ஒரு logo என்பது நல்ல யோசனை சிவா. நானே, அதை என் வலைப்பதிவுகளில் முதலில் செய்யப் பார்க்கிறேன்--ரவி 19:19, 23 மார்ச் 2007 (UTC)

அம்பர் தொகு

சிவகுமார், என் பேச்சுப்பக்கத்தில் உங்களுக்கு மறுமொழி தந்துள்ளேன். பார்க்கவும்.--செல்வா 00:13, 24 மார்ச் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

ஆன்மாவா, ஆத்மாவா? தொகு

சிவகுமார், அத்வைதம் ப்க்கத்தை பார்க்கவும். ஆத்மாவை ஆன்மாவாக்கினால் பரமாத்மாவையும் பரமான்மாவாக்கவேண்டுமல்லவா? அது எனக்கு சரியாகப்படவில்லையே! நான் 'ஆன்மா' என்ற் தலைப்பில் புது பக்கம் தயார் (இது தமிழ்ச் சொல்லா?) செய்துகொண்டிருக்கிறேன்.

--Profvk 15:47, 10 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி தொகு

வரவேற்பிற்கு நன்றி சிவா. பல நாட்களாக பங்களிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது பணியிடத்தில் மேலும் ஒரு மாற்றம். இருப்பினும் முன்பிற்கு இப்போது ஓரளவு நேரம் கிடைக்கிறது. பங்களிக்கத் துவங்குகையில் இந்தச் சிக்கல் வந்துவிட்டது. அங்கு சற்று நேரம் செலவழித்தேன். இனி வெகு சிறு அளவேனும் பங்களிக்க எண்ணியுள்ளேன். பல புது பயனர்கள் வந்து பங்களித்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. :-) -- Sundar \பேச்சு 14:08, 17 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி + மூன்று தேவைகள் தொகு

திரு. செல்வா, திரு மயூரநாதன், திரு நட்கீரன் திரு சிவகுமார், ஆகிய நால்வருக்கும் என்னை ஊக்குவித்துப்பாராட்டியதற்கு நன்றி.

என்னுடைய தேவைகள் மூன்று.

1. நான் எழுதும் தமிழைத்தீட்டி நல்ல தமிழாக்கம் செய்வதற்காகவும், கல்லூரிகளில் கணிதத்தை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ளாத மாணவர்களும் கணிதப்பொருளைஅறிந்துகொள்ளும்படி நடை எளிமையாக இருக்கிறதா என்பதற்கும், என் கட்டுரைகளை ஆய்வுத்திறன் செய்து எனக்கு உதவ வேண்டும்.

2.வடிவியல் வரைபடங்கள் நிறையப்போடவேண்டியிருக்கும். நான் Latex முறையில் தட்டச்சு செய்ய இன்னும் கற்கவில்லை. வேறு எப்படி வரைபடங்களை upload செய்வது?

3. Abstract என்ற ஆங்கிலச்சொல்லிற்கு ச்சரியான தமிழ்ச்சொல்லை சீக்கிரம் முடிவு செய்யவேண்டும். நான் இச்சொல்லை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தவேண்டியிருக்கும்.

Abstract (as an adjective): நுண்பிய; நுண்புல:

Abstract (as a verb): தத்துவப்படுத்து; பண்படுத்து; நுண்பியம்பு;

Abstraction: பண்பியல் : நுண்பியம்; தத்துவப்படுத்துதல்; கருத்தியல் வழி காணல்;

இப்படி பல மாற்று முறைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. முடிவை நான் தமிழ் வல்லுனர்களுக்கு விடுகிறேன்

--Profvk 15:15, 18 ஏப்ரல் 2007 (UTC)

மகிழ்ச்சி தொகு

துப்புரவு, இற்றைப்படுத்துகை, வார்ப்புரு மற்றும் பக்கங்களில் படிம இணைப்பு, மேம்படுத்துகைப் பணிகளைக் காண மகிழ்ச்சி. இவண் - ரவி, தமிழ் விக்கிமீடியா, விக்சனரி கிளை :) --ரவி 19:14, 20 ஏப்ரல் 2007 (UTC)

இந்த மாதம் நீங்களும் டெரன்சும் போட்டுத் தாக்கிக்கிட்டு இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி. விரைவில் மாமன்னரும் இணைந்தாலும் இணையலாம் :) விக்சனரியில் ஏகப்பட்ட துப்புரவுப் பணிகள் இருப்பதால் அவ்வப்போது அந்தப் பக்கமும் உங்களைக் காண முடிந்தால் மகிழ்ச்சியே !!--ரவி 19:21, 20 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி சிவா, சில துப்புரவு பணிகளை எனது பாட் கொண்டு செய்து முடித்தேன்.--டெரன்ஸ் \பேச்சு 06:52, 24 ஏப்ரல் 2007 (UTC)

தயவு செய்து வாக்களிக்கவும் தொகு

பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil

இந்த பக்கத்தைப் பார்த்து சரியா எனக்கூறினால் தொடர்ந்து எல்லப் பக்கங்களுக்கும் செய்கிறேன்.ஆண்டுக்க்ப் பிறகு இடைவெளி வேண்டுமா?--டெரன்ஸ் \பேச்சு 07:36, 27 ஏப்ரல் 2007 (UTC)

ஆங்கில விக்கி பக்கச்சட்ட இணைப்புக்கள் தொகு

சிவா, ஆங்கில விக்கி பக்கச்சட்ட இணைப்புகள் 25, 000 கட்டுரைகளைத் தாண்டிய விக்கிக்களுக்கே தரப்படுகின்றன. en:Template:MainPageInterwikis-- Sundar \பேச்சு 10:42, 27 ஏப்ரல் 2007 (UTC)

எனக்கு என்ன தோணுதுன்னா, நாம 25,000 எட்டுவதற்குள் அங்கு இடம்பெறுவதற்கான தகுதியை 50, 000 ஆக்கி விடுவார்கள் :)--ரவி 10:53, 27 ஏப்ரல் 2007 (UTC)

அதற்குள்ளே நமக்கு இன்னும் சில நிரோஜன்கள் கிடைத்தால் தேவலை :)--Sivakumar \பேச்சு 10:56, 27 ஏப்ரல் 2007 (UTC)

ஆம், வாய்ப்பிருக்கிறது. அங்குள்ள சிறிய இடத்தில் அவர்களால் கூடுதல் இணைப்புகள் தர முடியாது. நாம் கட்டுரை எண்ணிக்கைப் பட்டியலில் சில இடங்கள் உயர்ந்தால்தான் இடம்பெற முடியும். -- Sundar \பேச்சு 11:11, 27 ஏப்ரல் 2007 (UTC)

மறு: வழிமாற்றுப்பொத்தான் தொகு

சிவா, வழிமாற்றுப்பொத்தான் உட்பட பல பொத்தான்களையும் இற்றைப்படுத்தியுள்ளேன். தேவையான மாற்றங்களை இனி இங்கு செய்து கொள்ளலாம். -- Sundar \பேச்சு 06:33, 30 ஏப்ரல் 2007 (UTC)

விக்கியிடை இணைப்புகள் தொகு

இந்த மாற்றம் நீங்கள் தெரியாமல் செய்ததா? அல்லது மற்ற மொழிகள் வேண்டாமென நீக்கினீர்களா?--டெரன்ஸ் \பேச்சு 12:16, 30 ஏப்ரல் 2007 (UTC)

நீங்கள் செய்தது சரி இப்பதான் கவனித்தேன் 14---15 வித்தியாசத்தை மன்னிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 12:18, 30 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் அர்த்தம் தேவை தொகு

சிவா, இப்போது தமிழக காவல்துறையைப் பற்றிய கட்டுரை ஒன்றை உருவாக்கி வருகிறேன். கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்கள் தேவை :). என் அறிவுக்கு இது ஒன்றும் தெரியவில்லை. ஆகவே தங்களால்/தங்களுக்குத் தெரிந்த பிறரால் முடிந்தால் எனக்கு உதவுங்கள்.

  • Director General of Police
  • Inspector General
  • Superindent of Police
  • Commissioner of Police

நன்றி. --யோகேஸ் 17:23, 3 மே 2007 (UTC)Reply

  • DGP - காவல் துறை இயக்குநர் [2]
  • IG - காவல் பொது ஆய்வாளர்?
  • SP - காவல் கண்காணிப்பாளர் -[3]
  • CoP - காவல் ஆணையாளர் [4]

என்னுடைய பரிந்துரைகள் மேலே. -- Sundar \பேச்சு 06:58, 4 மே 2007 (UTC)Reply

bot தொகு

பாட் வேண்டுகோள் செய்து முடிக்கப்பட்டது--ரவி 20:20, 3 மே 2007 (UTC)Reply

ஒரு பரிந்துரை தொகு

சிவா, விக்கிபீடியாவில் எல்லாப் பக்கங்களிலும் பிற பக்கங்களுக்கான இணைப்புகள் உள்ள வார்த்தைகள் அடிக்கோடிட்டும், நீல நிறத்திலும் தெரிகின்றன. இணைப்புப் பக்கங்கள் இல்லாத வார்த்தைகள் சிவப்பு நிறத்திலும், அடிக்கோடிட்டும் தெரிகின்றன.

ஆனால், ஆங்கில விக்கிபீடியாவில் அவ்வாறு அடிக்கோடிடப்படாமல் நீலம் மற்றும் சிவப்பு நிறத்துல் தெரிகின்றன.Mouse pointer-ஐ அந்த வார்த்தையின் மேல் கொண்டு செல்லும் போது மட்டுமே அடிக்கோடு தெரிகிறது. அது தோற்றத்தில் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. தமிழ் விக்கிபீடியாவிலும் அவ்வாறு செய்ய இயலுமா? --யோகேஸ் 08:41, 4 மே 2007 (UTC)Reply

யோகஷ், புகுபதிந்த பயனர்கள் என் விருப்பத்தெரிவிகள் - > பலதரப்பட்டவை போய் இணைப்புகளுக்கு அடிக்கோடிடு - never என்ற தரலாம். புகுபதியாத பயனர்களுக்கும் அடிக்கோடு வராமல் காண்பிக்க தமிழ் விக்கிபீடியா நிரலில் மாற்ற வேண்டும். சுந்தரிடம் சொல்லி வைக்கிறேன். --ரவி 11:51, 4 மே 2007 (UTC)Reply

சோழவந்தான் தொகு

தொல்காப்பிய நெறிகளில் முதலெழுத்தாக வரும் சகரம் தொடர்புடைய ஒலிப்பு முறை மட்டும் நடைமுறையில் மாற்றம் கண்டுள்ளது என வடக்கன் ஆ.வியில் தெரிவித்த நினைவு. சோழவந்தான் என்பதை அனைவரும் "soolavanthaan"என்றுதான் ஒலிக்கின்றனர். "sh" அதனுடனும் பொருத்தமில்லாத இரண்டும் கெட்டான் தான்! -- Sundar \பேச்சு 12:50, 4 மே 2007 (UTC)Reply

மேலே நான் இட்டுள்ள மொழிபெயர்ப்புப் பரிந்துரைகளையும் பாருங்கள். -- Sundar \பேச்சு 12:51, 4 மே 2007 (UTC)Reply

நன்றி தொகு

நீங்கள் இனியன் என்னும் வலைப்பதிவில் தமிழில் ஒலித்திரிபு காட்டும் முறையைக் கையாண்டிருப்பது பற்றி நீங்கள் எனக்குச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. த-வி யில் பயன்படுத்த முன்னரே பரிந்துரைத்தேன். ஏனோ, இதன் நன்மைகளைப் பயனர்கள் உணரவில்லை அல்லது வரவேற்க வில்லை. தேடுபொறிகளில் கிட்டுவதில்லை என்பதும், புதிய முறை என்றும் கூறி தடுத்து விட்டார்கள். புதுமைகள் எளிதில் வரவேற்கப்படுவதில்லை. எது பயன் பெருக்கும் என்று எண்ணி புதுமைகளை வரவேற்கப்பட வேண்டும். புதுமை என்பதற்காகவே ஒன்றை வரவேற்கவேண்டாம். பயன் இடர் அறிந்து புதுமைகள் வரவேற்கப்படவேண்டும். இவை என் தனிக்கருத்துக்கள். வலியுறுத்தவில்லை.--செல்வா 22:40, 14 மே 2007 (UTC)Reply

தமிழ்99 தொகு

சிவா, தமிழ்99 பயனர், தமிழ்விசைப் பயனர் வார்ப்புருக்களுக்கு நன்றி. இவை குறித்த விழிப்புணர்வு பெருக்க உதவும். என் வலைப்பதிவிலும் தமிழ்99 விளம்பரப் படம் ஒன்று வைத்துள்ளேன்.--ரவி 18:17, 18 மே 2007 (UTC)Reply

குப்தர்கள், ஹர்ஷர்கள் தொகு

சிவா, தங்கள் ஊக்கத்திற்கு நன்றி(தேவையாதும்கூட). தற்போது குப்தர்கள், ஹர்ஷர்கள் பற்றி கட்டுறைகள் எழுதிய பிறகு புத்தரின் சீடர்கள் பற்றிய கட்டுறைகளை தொடரலாம் என்றிருக்கிறேன். --Sridhar.sivaraman 15:45, 24 மே 2007 (UTC)Reply


தொடர்புக்காக::ஹரி கிருஷ்ணன் தொகு

சிவா, தாங்களும் பெங்களூருவில்தான் இருக்கிறீர்கள் என்பதனை அறிய மகிழ்ச்சி. தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை (அல்லது தொலைபேசி/கைப்பேசி எண்ணை) harikrishnan at yahoo dot com என்ற விலாசத்துக்கு அனுப்பினால் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும். தொகுக்கப்படாமலிருக்கும் பல தலைப்புகளில் எழுதவும் தொகுக்ககவும் சில உதவிகள்/வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. இயலுமானால் நேரிலும் சந்திக்கலாம். --ஹரி கிருஷ்ணன் 02:38, 5 ஜூன் 2007 (UTC)

முன்னணி, மூத்த, தீவிர தமிழ் விக்கிபீடியர்கள் பலரும் ஓய்ந்திருப்பது காணப் பொறுக்காமல் இன்னிக்கு எட்டிப் பார்த்தேன் :) ஆளில்லா ஊரில் தனியா விக்கிப்பணி ஆற்றுவது எவ்வளவு கொடுமைன்னு நான் சின்ன வயசுல அனுபவிச்சிருக்கேன் :) பல தமிழிணையக் களங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டு இருக்கிறேன். ஆனா, விக்கியை விட்டுட முடியுமா? நாம தண்ணி விட்டு வளர்த்ததாச்சே :) அப்பப்ப கண்டிப்பா வந்து போவேன்--ரவி 19:54, 5 ஜூன் 2007 (UTC)

மின்னஞ்சல் முகவரி தொகு

தங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிய இயலுமா? முடியும் என்றால் பயனர் பக்கத்தில் குறிப்பிடவும் அல்லது என்னுடைய மின்னஞ்சல் முகவரியிற்குக் umapathyxp@gmail.com இற்கு வெற்று மின்னஞ்சல் அனுப்ப இயலுமா?. நன்றி. --Umapathy 15:58, 12 ஜூலை 2007 (UTC)

உங்கள் பங்களிப்பு தொகு

சிவகுமார், நீங்கள் மிகுந்த பணிச்சுமைகளுக்கு இடையே பங்களிப்பது போல் தெரிகின்றது. நீங்கள் மீண்டும் எப்பொழுதும் போல பங்களிக்கும் வரை நாங்கள் யாவரும் சேர்ந்து ஈடு கட்டுகிறோம், கவலைப் படாதீர்கள். பணிதான் முதன்மையானது. அவ்வப்போது உங்கள் பங்களிப்புக்ளைக் காணும் பொழுது மகிழ்ச்சி தோன்றுவதை நான் மறைக்கவில்லை :) --செல்வா 14:10, 17 அக்டோபர் 2007 (UTC)Reply

கட்டுரையை மேம்படுத்த வேண்டுகோள் தொகு

சிவா, இந்திய இரயில்வே கட்டுரையை சிறப்பாக உருவாக்கி விட்டு புகைவண்டி கட்டுரையை இப்படி விடலாமா ? --ரவி 18:07, 16 நவம்பர் 2007 (UTC)Reply

சிவக்குமார், ஆதாரங்களைத் தருதல் உள்ளடக்கத்தை சுந்தரின் கட்டுரை சிறப்பாக தருகின்றது. ஒரே தகவலை கொண்ட பல பக்கங்கள் தேவையில்லை, எனவே நீக்கிவிட்டேன். உள்ளடக்கம் சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் இருக்கின்றது. --Natkeeran 01:09, 5 டிசம்பர் 2007 (UTC)

Palliyodam image தொகு

Hi Sivakumar, I include that image from en.wikipedia. but that image is deleted from there. So I think it may be copyrighted. thankyou--Praveenp 02:43, 7 டிசம்பர் 2007 (UTC)

ஆண்டு அறிக்கை தொகு

வணக்கம் சிவக்குமார், விடாமல் தொடர்ந்து அமைந்தியாக பங்கத்துவருகின்றீர்கள். அந்த வகையில், த.வி ஏற்பட்ட மாற்றங்களையும், அது செல்ல வேண்டிய பாதை நோக்கியும் உங்களுக்கு நிச்சியம் கருத்துக்கள் இருக்கும். உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் மிக்க நன்று.

இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:

--Natkeeran 00:39, 20 டிசம்பர் 2007 (UTC)

Happy New Year 2008! :) தொகு

Hi Sivakumar!

Could you please help me preparing a brief version of this wiki article that is still not available in the Tamil (.ta) language page? If you could, that would be so great and I will be very thankful!

If you need any help with other wikipedias, please let me know.

This is the version that could help as a source for the Tamil (.ta) version of this article:

English version (It would be great if you could help even with 1-3 sentences, as even a stub-article would help to get it started and serve as a basis for future development).

Thanks a million and Happy New Year!

Angayarkarasi 08:25, 1 ஜனவரி 2008 (UTC)

பாராட்டுகள் தொகு

சிவகுமார், நீங்கள் அருமையாக அமைதியாக கட்டுரைகள் ஆக்கி வளம் சேர்த்து வருகின்றீர்கள்! பாராட்டுகள்! பங்காரசு வாசியேட்டசு, டாங்கனிக்கா ஏரி, பிருட்டே கால்டிகாசு முதலியன கட்டாயம் இருக்க வேண்டியன. மேலும் பல கட்டுரைகளிலும் தகவற்சட்டம் சேர்த்து ஒழுங்குபடுத்தி வருகிறீர்கள்! --செல்வா 15:35, 7 ஜனவரி 2008 (UTC)

நன்றி செல்வா! தங்களின் சேன் குட்டால் கட்டுரையே விலங்குகள் பற்றி படிக்கவும் இக்கட்டுரைகளை எழுதவும் தூண்டியது. சேன் குட்டால் அவர்களை தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி செல்வா. :)--சிவகுமார் \பேச்சு 05:31, 8 ஜனவரி 2008 (UTC)

சிவா, நல்ல அறிவியல் கட்டுரைகளைப் படைக்கிறீர்கள். அறிவியல் வகைப்பாடு தொடர்பான கலைச்சொல் பட்டியலைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:32, 11 ஜனவரி 2008 (UTC)

கட்டுவிரியன் நான் சிறுவயதுமுதலே மிரட்சியுடனும் ஆர்வத்துடன் பார்த்தது. ஆங்கில விக்கியில் இல்லாத சில ஆர்வமூட்டும் செய்திகளைச் சேர்க்கும் திட்டம் உள்ளது. அதற்கான துணைக்கட்டுரை ஒன்றை விரைவில் துவக்குகிறேன். கண்ணாடிவிரியன் கட்டுரையையும் துவக்குங்கள், என்னால் இயலும் தகவல்களை சேர்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:53, 26 ஜனவரி 2008 (UTC)
செய்யலாம் சுந்தர்.--சிவகுமார் \பேச்சு 07:02, 26 ஜனவரி 2008 (UTC)

சொற்கள் பற்றிய உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தன; தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஆர்வமூட்டக்கூடியன. அவற்றை நினைவில் வைத்துத் தேடி ஒரு பகுப்பில் இட்டுத் தருவதற்குப் பாராட்டுகள். விக்கிபீடியா வளர வளர, உங்களைப் போன்று தொடக்கத்தில் இருந்து இங்குள்ள நிகழ்வுகளை நினைவில் வைத்துச் செயல்படுபவர்களின் மிகவும் முக்கியம். institutional memory என்பார்கள்..--ரவி 22:41, 14 பெப்ரவரி 2008 (UTC)

இன்று சேர்த்தவைகள் எல்லாம் செல்வாவின் பங்களிப்புப் பக்கங்களைப் பார்த்து. :) --சிவகுமார் \பேச்சு 12:01, 15 பெப்ரவரி 2008 (UTC)

ஓ..இப்படி ஒரு குறுக்கு வழி இருக்கோ :) வினோத்தின் பங்களிப்புகளையும் கவனிக்கலாம் :) நீக்கல் உரையாடல்களைத் தொகுக்க வேண்டி வந்தால் கோபி, என்னுடைய பங்களிப்புகளைப் பார்க்கலாம் :) --ரவி 18:27, 15 பெப்ரவரி 2008 (UTC)

பறவைகளின் தமிழ்ப்பெயர்கள் தொகு

கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் 116 பறவைகளின் தமிழ்பெயர்களும் அவற்றின் அறிவியல் பெயர்களும் உள்ளன. நாம் அவற்றை பறவைகள் பட்டியல் கட்டுரையில் பதிவேற்றலாம். --சிவகுமார் \பேச்சு 13:17, 7 பெப்ரவரி 2008 (UTC)

மிகப் பயனுடைய இணைப்பு. நன்றிகள் சிவகுமார்! பல பறவைகளின் பெயர்களை பி.எல். சாமி அவர்கள் எழுதிய சங்க இலக்கியத்தில் பறவையின விளக்கம் என்னும் நூலில் உள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். சரியாக உள்ளன. பி.எல் சாமி இப்பொழுது நம்மிடையே இல்லை ஆனால் அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள் யாவும் முதன்மையானவை. சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் (முந்தைய பதிப்பில் நிலைத்திணை விளக்கம் என்று இருந்தது), சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் (தற்பொழுது என்னிடம் இல்லை), ஆகிய மூன்று நூல்களும் சாய்வின்றி நடுநிலை நிற்கும் சிறந்த ஆய்வுநூல்கள். பறவைகளின் வலசை (migration) பற்றிய செய்திகளும் பறவைகளின் பழக்க வழக்கங்கள் பற்றிய செய்திகளும் (சங்க இலக்கியத்தில் உள்ளவை) அருமையாக தொகுத்தும், புது ஒப்பீட்டு ஆய்வுகளும் செய்தும் எழுதியுள்ளார்.--செல்வா 23:07, 15 மார்ச் 2008 (UTC)

Wikitravel தொகு

Interested in Wikitravel? tamil il wikitravel ai mozhipeyarppoma?

http://wikitravel.org/en/Main_Page

Please help Mugunth Kumar 15:35, 29 மே 2008 (UTC)Reply

வ‌ன்ன‌க்ம் தொகு

இவரை பட்டடி ஒரு கட்டுரை எலுத‌ முடுயுமா? சிங்க‌ப்பூரில் ஒரு முக்கிய‌மான‌ தமிழ அரசியல்வாதி.--59.189.43.78 18:31, 31 மே 2008 (UTC)Reply

மேம்படுத்தல்களும், பரிந்துரைகளுக்கு நன்றி. தொகு

உங்களின் மேம்படுத்தல்களுக்கும் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி. ஒரு கட்டுரையை எழுதி விட வேண்டும் என்ற தூண்டலில் எழுத்துப் பிழைகள், தகவல் தெளிவில்லாத, ஆதாரங்கள் தகுந்தவாறு சேர்க்கப்படாத கட்டுரைகளை எழுதுவது சற்று பழகிவிட்டது என்று சற்று இடிக்கிறது. எனினும் விக்கியில் somthing rather than nothin, மற்றும் உங்களைப் போன்ற பிற பயனர்கள் மேம்படுத்துவர் என்று எண்ணத்தில் அவற்றை தொடர்ந்தும் எழுதுவேன் என்றே நினைக்கிறேன். உன்களின் அனைத்து வேண்டுகோளுக்கும் உடனேயே பதில் தர விட்டாலும், இயன்றவரை செய்வேன். வழிகாட்டி அடையாளம் ஒரு போக்குவரத்து அடையாளம்..அதாவது Traffic Sign. அவை போக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை கட்டுரைக்கு அமைய பல வகைப்படும். இது ஒரு வகை. Consistent ஆக இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். நீங்கள் இட்ட படிமமும் இங்கு பொருந்தவில்லை. மாற்றி விடலாம். --Natkeeran 18:03, 2 ஜூலை 2008 (UTC)

பாராட்டுப் பதக்கம் தொகு

 
சிவா, நீங்கள் வியக்கவைக்கும் விதமாக, பொறுமையாக, பொறுப்பாக 672 கட்டுரைகள் எழுதியும், பல கட்டுரைகளை ஆழப்படுத்தி விரிவுபடுத்தியுமுள்ளீர்கள். உங்கள் ஊக்கமும் உழைப்பும் எல்லோருக்கும் புத்துணர்வு ஊட்டுவது. முதற்காலத்தில் இருந்தே பங்களித்து, பெருமை சேர்த்து, அடிக்கால் நாட்டுநர்களில் ஒருவர். உங்கள் பங்களிப்புகள் பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. உடன்பங்களிப்பாளனாகிய நான் என் பாராட்டைத் தெரிவிக்க ஒரு நாள்மீன் பதக்கம் உங்களுக்கு அன்புடன் அளிக்கிறேன்பயனர்:செல்வா

சிவா, நீங்கள் வியக்கவைக்கும் விதமாக, பொறுமையாக, பொறுப்பாக நெய்யாறு என்னும் கட்டுரையோடு மொத்தம் 672 கட்டுரைகள் எழுதியும், பல கட்டுரைகளை ஆழப்படுத்தி விரிவுபடுத்தியுமுள்ளீர்கள். உங்கள் ஊக்கமும் உழைப்பும் எல்லோருக்கும் புத்துணர்வு ஊட்டுவது. முதற்காலத்தில் இருந்தே பங்களித்து பெருமை சேர்த்து, அடிக்கால் நாட்டுநர்களில் ஒருவர். உங்கள் பங்களிப்புகள் பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. உடன்பங்களிப்பாளனாகிய நான் என் பாராட்டைத் தெரிவிக்க ஒரு நாள்மீன் பதக்கம் உங்களுக்கு அன்புடன் அளிக்கிறேன். உங்கள் பங்களிப்புகள் மென்மேலும் த.விக்கு வளம் சேர்க்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 19:03, 4 டிசம்பர் 2008 (UTC)

நன்றி செல்வா, இங்கு பங்களிக்கும் அனைவரின் விடாமுயற்சியும் உழைப்பும் தமிழின்பால் கொண்டுள்ள பற்றுமே எனக்கு உந்துதல் அளிக்கின்றன. இனிவரும் நாட்களில் இன்னும் நன்கு பங்களிக்கவே விரும்புகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 17:06, 5 டிசம்பர் 2008 (UTC)

நன்றி தொகு

புனித ஜார்ஜ் கோட்டையை பற்றிய எமது கட்டுரைக்கு தாங்கள் அளித்த வாழ்த்திற்கு நன்றி திரு.சிவக்குமார் அவர்களே..


வாய்ப்பிற்கு நன்றி தொகு

புன்னாலைக்கட்டுவன், யாழ் ஐ பிறப்பிடமாகக் கொண்ட எனக்கு, வித்துவ சிரோமணி சி.கணேசையர் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பக்கத்தை விக்கிப்பீடியாவில் பார்க்க ​நேர்ந்தது. ஒரு முழுமையான கட்டுரையை தொகுக்க எண்ணியதன் விளைவே இக்கட்டுரையாகும். (அண்ணாவின் உதவியுடன் விக்கிபீடியாவை அணுகினேன்)

- கமலேஸ்

Return to the user page of "Sivakumar/தொகுப்பு 2".