பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு03

காப்புரிமம் தொகு

இந்தப் பக்கத்தை பார்க்கவும்மேலும் அரசியல்கட்சியினர் படங்களை எதிர்கட்சியினர் கூட பயன்படுத்துகின்றனர். துண்டுபிரசுரத்திலும்,சுவரொட்டியிலும் கிடைக்கும் இவைகளுக்கு யாரும் காப்புரிமை கோரியதில்லை. பத்திரிகைகளும் வாழ்த்து அட்டை வணிகர்களும் காப்புரிமையின்றியே பயன்படுத்துகின்றனர்.--ஹிபாயத்துல்லா 18:02, 9 திசம்பர் 2010 (UTC)Reply

1) காப்புரிம விதிகளின் படி யாரும் கோரவில்லையென்றாலும் காப்புரிமம் இருக்கத்தான் செய்யும். ஆக்குனர் தெளிவாக இது காப்புரிமை பெற்றதில்லை என்று சொன்னாலொழிய நாம் இல்லையென்று எடுத்துக் கொள்ளவே கூடாது. Copyright is presumed to exist unless and otherwise specifically released to public domain or given rights. எனவே ஒரு படத்தில் காப்புரிம குறிப்பு இல்லை என்ற காரணத்துக்காக நாம் அதனைப் பயன்படுத்த இயலாது. இந்த விஷயத்தில் அனைத்து நாட்டு காப்புரிமச் சட்டங்களும் தெளிவாக உள்ளன.
2) >>பத்திரிகைகளும் வாழ்த்து அட்டை வணிகர்களும் காப்புரிமையின்றியே பயன்படுத்துகின்றனர்
இந்தியாவில் காப்புரிமச் சட்டங்கள் அமலாக்கம் கடுமையாக இல்லையென்பதால் இது நடக்கின்றன. அனால் விக்கிமீடியா அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகையால் அமெரிக்கக் காப்புரிமச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதனைப் பின்பற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எனவே விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை அமெரிக்க காப்புரிம விதிகளை தான் பின்பற்ற வேண்டும். இந்திய வாழ்த்து அட்டை நிறுவனங்கள் போலவும், பத்திரிக்கைகள் போலவும் நாம் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட முடியாது. (இந்த செயல்கள் இந்திய சட்டத்துக்கும் புறம்பானவை தான் என்பது வேறு விஷயம்). எனவே வாழும் மாந்தரின் புகைப்படங்களையும், சுவரொட்டிகளையும் நாம் “நியாயப் பயன்பாட்டு” காரணம் காட்டி பயன்படுத்த முடியாது.
3) இந்தியாவிலும் காப்புரிமச் சட்டம் இதே அளவு கடுமையானது தான். ஆனால் விதி மீறல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. யாரும் கண்டு கொள்வதில்லை. எதிர்த்து யாரும் வழக்குத் தொடுத்து போராடினாலொழிய காப்புரித்தை பாதுகாக்க முடிவதில்லை. இப்போது இணையம் பரவலானதிலிருந்து இந்த உரிம மீறல்கள் அதிகமாகியுள்ளன.

சுருக்கமாக - இந்திய நடைமுறைகளை நாம் விக்கிப்பீடியாவில் பின்பற்ற முடியாத நிலை உள்ளது. அமெரிக்க சட்டத்துக்கு உட்படுவதற்காக இத்தகு படங்களை நீக்க வேண்டி உள்ளது.--சோடாபாட்டில் 18:21, 9 திசம்பர் 2010 (UTC)Reply

சோடாபாட்டில் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. மேலும், விக்கிப்பீடியாவின் இது பற்றிய கொள்கைகள் மிகவும் தெளிவாகவே உள்ளன. காப்புரிமம் மீறாமல் இருப்பது கட்டாயம் தேவைப்படுவது. --செல்வா 18:30, 9 திசம்பர் 2010 (UTC)Reply

அலைகளும் அவற்றின் பயன்களும் தொகு

சோடாபாட்டில் நீங்கள் அலைகளும் அவற்றின் பயன்களும் கட்டுரையை நீக்கியுள்ளீர்கள்.இதன் உள்ளடக்கம் மின்காந்த அலைகள் கட்டுரையின் உள்ளடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. என் அறிவுக்கு தெரிந்தவரை அலை, மின்காந்த அலை, பொறிமுறை அலை என இரு வகைப்படும். எனவே இதை மீட்டெடுத்து இரு கட்டுரைகளின் பொதுமைப் பகுதிகளை ஒன்றிணைக்க உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் 07:18, 13 திசம்பர் 2010 (UTC)Reply

மீட்டெடுத்து விட்டேன் சஞ்சீவி. துப்புரவு செய்யும் அளவுக்கு எனக்கு இயற்பியலில் சரக்கு பத்தாது. நீங்கள் கொஞ்சம் உதவுங்களேஎன்.--சோடாபாட்டில் 07:20, 13 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி சோடாபாட்டில். பின்புதான் அவதானித்தேன் அலை என்று இன்னொரு கட்டுரை உள்ளது.அலைகளின் பயன்பாடு ஒரு பெரிய புலம் என்பதால் கட்டுரை அப்படியே வளரட்டும் என நினைக்கிறேன்.உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும்.--சஞ்சீவி சிவகுமார் 07:43, 13 திசம்பர் 2010 (UTC)Reply

aaaaa தொகு

சோடா தவறுதலாக சேமிப்பை அழுத்திவிட்டேன் (முன்தோற்றம் காட்டு தான் அழுத்தி இருக்கனும்), அதை குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் இணைக்கவுள்ளேன். தமிழில் எழதுவதற்காக விக்கி பக்கத்தை தேர்ந்தெடுத்தேன். இல்லையெனில் கூகுள் அல்லது யாகூ மெயில் தான்.

குறும்பனா.. :-) நான் யாரோ ஐபி விளையாடுகிறார் என்று நினைத்தேன். மீட்டெடுத்துள்ளேன். பப்ளிக் கம்ப்யூட்டரில் இருக்கிறீர்களா. லாகவுட் ஆகியுள்ளதே?--சோடாபாட்டில் 17:45, 13 திசம்பர் 2010 (UTC)Reply

ஆமாங்க நான் தான் அது. இப்ப aaaaa வை நீக்கிடறேன்.--குறும்பன் 22:07, 13 திசம்பர் 2010 (UTC)Reply

google தொகு

சோடாபாட்டில், உங்கள் கவனத்திற்கு....இந்தப் பக்கத்தில் கட்டுரைகளின் பெயர்களும் இணைப்புகளும் பின்வருமாறு மாறியுள்ளன...

3.Water fluoridation - பயனர்:Thangata/தமிழ்நாட்டின் வரலாறு 15.History of Tamil Nadu - பயனர்:Thangata/நீரில் ஃவுளூரைடு சேர்ப்பு/கரைப்பு

-அன்புடன் --சாந்த குமார் 10:52, 23 திசம்பர் 2010 (UTC)Reply

சோடாபாட்டில், இந்தக் கட்டுரை (இருமை நட்சத்திரம்) எங்கள் அணி உறுப்பினரால் மொழிபெயர்க்கப்பட்டதல்ல... என்ன செய்யலாம்?

சரி செய்துவிட்டேன். இருமை நட்சத்திரத்தை என் பயனர்வெளிக்கு நகர்த்தி விட்டேன். --சோடாபாட்டில் 11:05, 23 திசம்பர் 2010 (UTC)Reply

சரி!! நன்றி சோடாபாட்டில்!! -அன்புடன் --சாந்த குமார் 11:14, 23 திசம்பர் 2010 (UTC)Reply

எழுத்தாளர் சோடாபாட்டில் தொகு

இங்கு உங்கள் எழுத்தைப் பற்றி படித்தேன். வாழ்த்துக்கள்! கலக்குங்க :) ஸ்ரீகாந்த் 06:25, 24 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றி ஸ்ரீகாந்த் :-). எல்லாம் செம்மொழி மாநாடு விக்கிப்பீடியா ஸ்டாலில் ஆரம்பித்தது தான். பாரா நம் ஸ்டாலுக்கு வந்து விட்டு விக்கிப்பீடியாவைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். சுவாரஸ்யமாக எழுத நமக்கு தெரியாது என்று. நானும் ரவியும் அவருடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தோம். பின் என்னால் சுவாரஸ்யமாக எழுத முடியும் என்று சொன்னேன். அங்கிருந்து ஆரம்பித்து இப்போது ரெண்டு புத்தகம் முடிந்து விட்டது.--சோடாபாட்டில் 06:53, 24 திசம்பர் 2010 (UTC)Reply
உங்கள் அளவுக்கு, குறுகிய காலத்தில், தமிழ் விக்கிக்கு மிக முனைப்பான பங்களிப்புகளை நல்கியோர் இல்லை என்றே சொல்லலாம். தொழிற்பணி, எழுத்துப் பணிக்கு இடையே விக்கியில் நீங்கள் காட்டும் ஈடுபாடு மலைக்க வைக்கிறது. பாராட்டுகளும் நன்றியும்--இரவி 07:22, 24 திசம்பர் 2010 (UTC)Reply
இப்பதான் கட்டுரையைத் தொடங்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். :) வாழ்த்துகள் சோடா. -- சுந்தர் \பேச்சு 09:12, 24 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றி சுந்தர், ரவி. எனக்கு கட்டுரை வேண்டாம் :-). ஆ. விக்கியில் நான் சண்டையிடும் விசமிகள் நேரே இங்கு வந்து அதை சேதப்படுத்துவார்கள். மேலும் எளிதில் கூகுளபிள் ஆக இருக்க வேண்டாமென்றும் நினைக்கிறேன் :-)--சோடாபாட்டில் 09:28, 24 திசம்பர் 2010 (UTC)Reply

எழுத்தாளர் சோடாபாட்டிலுக்கு வாழ்த்துகள். இனிமேலாகுதல் உங்களை பாலா என அழைக்கலாமா சோடா?--Kanags \உரையாடுக 09:44, 24 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி கனக்ஸ், தாராளமாக அழையுங்கள் :-)--சோடாபாட்டில் 09:50, 24 திசம்பர் 2010 (UTC)Reply
வாழ்த்துகள் பாலா.மிகக் குறுகிய காலத்தில் பல கட்டுரைகளைத் தந்ததுடன் அல்லாது நிர்வாகியாகவும் சிறந்தமுறையில் வேகமாக பணியாற்றிவரும் உங்களது பன்முகதிதிறனை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.பூனையை பையிலிருந்து வெளிவிட்ட பாரா, அறிமுகப்படுத்திய ஸ்ரீகாந்த்,சுந்தர்,இரவிக்கு நன்றிகள். உங்கள் ஆக்கங்கள் தமிழ் உலகெங்கும் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் !!--மணியன் 11:11, 24 திசம்பர் 2010 (UTC)Reply
  • வாழ்த்துகள் பாலா. உங்கள் ஆர்வம் எழுத்துகளில் பொங்குவதைப் பார்க்கையில் பாட்டிலில் இருந்து சோடா நுரைத்துக் கொண்டு வெளி வருவது போலுள்ளது. எனவே, உண்மையிலேயே நீங்கள் சோடாபாட்டில் தான்!! --பரிதிமதி 17:05, 24 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி மணியன், ரவி சார். :-)--சோடாபாட்டில் 17:25, 24 திசம்பர் 2010 (UTC)Reply

எழுத்தாளர் சோடா அத்துறையிலும் சாதனை படைக்க வாழ்த்துகள். பாரா கண்டுபிடித்த சோடா - எதுகை மோனையா இருக்குல்ல? பாரா தவி-யை பற்றி தவறாக கருத்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன் (நினைப்புதான். என் நினைப்பு தவறாக இருந்தால் மகிழ்ச்சியே) சோடா பாரா நினைப்பை மாற்றுங்கள். எனக்கு வரலாற்று புதினம் மிகவும் பிடிக்கும் காட்டு:- கடல்புறா, பொன்னியின் செல்வன். கோரிக்கையை மறைமுகமாக சொல்லியிருக்கேன் --குறும்பன் 01:55, 25 திசம்பர் 2010 (UTC)Reply

வாழ்த்துக்கள், சோடாபாட்டில். --இரா. செல்வராசு 04:48, 25 திசம்பர் 2010 (UTC)Reply

எழுத்தாளர் பாலாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை 12:12, 25 திசம்பர் 2010 (UTC)Reply

தங்களை எழுத்தளராக அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 13:26, 25 திசம்பர் 2010 (UTC)Reply

வணக்கம் சோடாபாட்டில். இப்போது தான் முகம் காட்டியாயிற்றே.. இப்போதாவது உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தரலாமா ;). வேண்டுமானால் உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைத் தவிர்த்து, உங்களின் விக்கி ஆர்வம், நீங்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளுக்கு இணைப்பு தருமாறு எழுதலாம். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சோடாபாட்டில் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 09:06, 30 திசம்பர் 2010 (UTC)Reply

  • இவ்வளவு வேலைப்பளுவிற்கிடையிலும் தாங்கள் (பாட்டில் பாலா) விக்கிப்பணிகளையும் செவ்வனே செய்வது மகிழ்வளிக்கிறது. மேலும் ஆர்வமோடு செய்தால் எதுவும் பளு அன்று (ஓசோ சொன்ன உவமை ஒன்று நினைவுக்கு வருகிறது - என் சகோதரன் எப்படி எனக்கு எப்படிச் சுமையாவான் ?) என்று எனக்கு உணர்த்தியமைக்கு நன்றி ..--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:48, 4 சனவரி 2011 (UTC)Reply

கோரிக்கைகள் தொகு

காப்புரிமை தரப்படாத காரணத்தினால் இவ்விரு படங்களையும் நீக்கப் பரிந்துரைக்கிறேன். இவை கைபேசியால் எடுக்கப்பட்டவை போலத் தோன்றினாலும் காப்புரிமை தரப்படாத காரணத்தினால் இவற்றைத் தாராளமாக நீக்கலாம்! #[[படிமம்:Sanithy eelamayooran.gif]] #[[படிமம்:Dindigulfort.jpg]]

no source எச்சரிக்கை வார்ப்புரு இட்டுள்ளீர்கள், அதில் குறிப்பிட்டுள்ள காலகெடு முடிந்தபின்னர் நீக்கி விடுகிறேன். பயனர்களின் பேச்சு பக்கங்களிலும் இது குறித்த எச்சரிக்கையினை இட்டு விடுங்கள் - அவர்கள் லைசென்சு தந்தால் நீக்காமல் வைத்துக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 12:10, 2 சனவரி 2011 (UTC)Reply

அவர்களிடம் ஏற்கனவே பல முறை (மிக நீண்டகாலமாக) தானியங்கிகள் மூலமும், பயனர்கள் மூலமும் அறிவிக்கப்பட்டிருந்ததை அவர்களது பேச்சுப் பக்கத்தில் பார்த்த பின்பு தான் இவற்றை நீக்கப் பரிந்துரைத்தேன்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 15:32, 4 சனவரி 2011 (UTC)Reply
நீக்கியாச்சு :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:44, 4 சனவரி 2011 (UTC)Reply

Site notice தொகு

கொஞ்சம் விக்கிப்பீடியா:சனவரி_15,_2011_விக்கிப்பீடியா_பத்தாம்_ஆண்டுவிழா_சென்னை Mediawiki:Sitenotice ல சேர்க்கரீங்களா? ஸ்ரீகாந்த் 02:49, 4 சனவரி 2011 (UTC)Reply

ஆச்சு--சோடாபாட்டில்உரையாடுக 03:02, 4 சனவரி 2011 (UTC)Reply
அதை தூக்கிட்டு இதை போட்றீங்களா ? நன்றி ஸ்ரீகாந்த் 04:23, 18 சனவரி 2011 (UTC)Reply
ஆச்சு--சோடாபாட்டில்உரையாடுக 04:33, 18 சனவரி 2011 (UTC)Reply

about pandiyar tamil article தொகு

If you want to undo my edits please read it dont simply undo. Also do your edits after reading what i have mentioned.Tamil1988 14:02, 5 சனவரி 2011 (UTC)Reply

உங்கள் சொந்த ஆய்வினை பதிவு செய்ய இது தளமல்ல. மிகப்பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட புறச்சான்றுகள் எதுவுமின்றி “பாண்டியரின் தோற்றம்” பகுதியில் சாதிகளைத் தொடர்பு படுத்தி எதையும் இணைக்க வேண்டாம். பரதவர் பற்றிய குறிப்பையும் அப்படியே நீக்கியுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 15:53, 5 சனவரி 2011 (UTC)Reply

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல் தொகு

வணக்கம் Sodabottle/தொகுப்பு03:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:24, 8 சனவரி 2011 (UTC)Reply

இடை விக்கி இணைப்பு தொகு

‌interwikilink தானியங்கி‌ மூலமாக ஏற்பட்டு விடாதா? எவ்வளவு நாளுக்குள் ஏற்படும்? தாங்கள் manual ஆகச் செய்வதைப் பார்க்கிறேன். இதன் முக்கியத்துவத்தைக் கூறவும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 01:52, 10 சனவரி 2011 (UTC)Reply

முதல் iwlink நாம் தான் குடுக்க வேண்டும். முதல் கனக்‌ஷன் மேனுவலாகக் குடுத்தால் தான் மீதியை 24-48 மணிநேரத்திற்குள் பிற தானியங்கிகள் சேர்க்கின்றன. (luckasbot ஓடினால் 6 அல்லது 8 மணி நேரத்தில் புதிய கட்டுரைகளை இணைத்து விடுகிறது, இல்லையெனில் மறு நாள் ஆகிறது). ஆனால் முக்கியமானது we have to provide at least one link to teach the bot - they dont parse article content to arrive at the iw link on their own. எனவே கட்டுரை எழுதும் போதே ஒரு இணைப்பு (ஆ. விக்கியாக இருத்தல் நலம்) கொடுத்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 01:57, 10 சனவரி 2011 (UTC)Reply

நன்றி - தொகு

வெளி இணைப்புகள் தொடர்பான கொள்கை பக்கத்தை கண்டேன். இனி என்தளத்திற்கான இணைப்பை தவிர்க்கிறேன். முன்பு கொடுத்திருக்கும் இணைப்பினையும் நீக்கிவிட வேண்டுமா?. சரியான இணைப்புகளை தந்திருக்கிறேன். எதற்கும் அதனை ஒரு முறை சரி பாருங்கள். தேவையற்றதாய் இருக்கும் இணைப்புகளை நீக்கிவிடுங்கள்.

[உ-ம்] - எம்.ஜி.ஆர் பக்கத்தில் எம்.ஜி.ஆர் வலைப்பூ இணைப்பினை கொடுத்துள்ளேன். அது வெளி இணைப்புகள் தொடர்பான கொள்கையின் முதல் விதிக்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் விளக்கவும். பிறகு ஆதாரத் தன்மைக்காக இணைப்பினை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா!.

எம்.ஜி.ஆருக்கென தனி பகுப்பினை இணைத்தமைக்கு நன்றி!, நன்றி!!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இது வரை இணைத்தவை பொருத்தமானவை எனில் இருக்கட்டும். இக்கொள்கை சில மாதங்களுக்கு முன்னரே உருவாக்கினோம், எனவே முன்பு இணைகப்பட்ட இணைப்புகள் பொருத்தமானவை என்றால் நீக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:36, 11 சனவரி 2011 (UTC)Reply

வார்ப்புரு தொகு

யெகோவாவின் சாட்சிகள் பக்கத்தில் உள்ள தகவற்பெட்டி வார்ப்புருவை சரிசெய்து தரவும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 18:20, 11 சனவரி 2011 (UTC)Reply

ஆங்கில விக்கியில் இருந்து தருவித்திருக்கிறேன். இவ்வார்ப்புரு தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 21:22, 11 சனவரி 2011 (UTC)Reply

வார்ப்புரு:Taxobox இல் மாற்றங்கள் தொகு

சிவப்புப் பட்டியல் பெயர்களில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என நினைத்தேன். வார்ப்புருவைத் தொகுத்தலில் சில தவறுகள் நிகழ்ந்தன. பொறுத்துக் கொள்ளவும்.--பரிதிமதி 03:18, 12 சனவரி 2011 (UTC)Reply

அதனால என்ன சார் :-) --சோடாபாட்டில்உரையாடுக 03:27, 12 சனவரி 2011 (UTC)Reply

சிறுகதைகள் தொகு

சிறுகதைகள் பற்றி கட்டுரை எழுதலாமா ? த.வி.யில் அவ்வளவாக இல்லையே! கட்டுரை விமர்சனமாக அமைந்து விடாமல் தடுப்பது எப்படி ? தற்கால எழுத்தாளர்களின் கதைகளின் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன ?--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 17:45, 17 சனவரி 2011 (UTC)Reply

தாராளமாக எழுதலாம். முழுவதும் விமர்சனமாக அமையாமல் பார்த்துக்கொண்டால் போதும் - எங்கு வெளியானது, வருடம், பதிப்பு வரலாறு, அதைப்பற்றி பிற விமர்சகர்களின் விமர்சனங்கள், ஏன் அது தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது போன்றவற்றை சேர்த்து விடுங்கள். தப்பித் தவறியும் உங்கள் விமர்சனப் பார்வை விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :-). உங்கள் எண்ணத்திலிருந்து கதைச்சுருக்கம்/கதைமாந்தர் தவிர வேறு எதுவும் கட்டுரையுள் வந்து விடக்கூடாது. உள்ளடகங்களை மேற்கோள் காட்டும் போது இரண்டு மூன்று வரிகளுக்கு மிகாமல் (கதையைப் படிப்பது போல இருக்கக்கூடாது, பகுதிகளை மீள் பிரசுரம் செய்வது போலவும் இருந்து விடக்கூடாது). --சோடாபாட்டில்உரையாடுக 17:58, 17 சனவரி 2011 (UTC)Reply
  • சிறுகதை குறித்த கட்டுரையினை எழுதுவதற்காக ஒரு கட்டுரை அமைப்பை முதலில் உருவாக்கி விட வேண்டும். அதில் முதலில் சிறுகதை குறித்த குறிப்பு, கதைச் சுருக்கம், கதையில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்து, கதை குறித்த விமர்சனங்கள் (ஆதாரம் காட்ட வேண்டும்) சிறப்புகள் என்பது போன்ற உள் தலைப்புகளை அனைத்துச் சிறுகதைக் கட்டுரைகளிலும் இருக்கும்படியாக ஒரு பொதுப்பார்வையை உருவாக்கி விடுவது நல்லது. இல்லையேல்...வீண் விவாதங்களும், தேவையற்ற பிரச்சனைகளும் அடிக்கடி சந்திக்க வேண்டியதாக இருக்கும்...--தேனி.எம்.சுப்பிரமணி. 18:11, 17 சனவரி 2011 (UTC)Reply
  • == குளத்தங்கரை அரசமரம் ==
  • குளத்தங்கரை அரசமரம் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலி்ல் சிறு வயதில் படித்ததாக ஞாபகம். இணையப் பல்‌கலைக் கழகம் சொல்லும் தலைப்பு சரியா எனத் தெரியவில்லை. இணையத்திலும் பெரும்பாலும் குளத்தங்கரை அரசமரம் என்று தான் உள்ளது.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:23, 18 சனவரி 2011 (UTC)Reply
  • வேறு ஏதேனும் வலைப்பதிவில்லாத ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன். அதன்படி வைத்துவிடலாம். இப்போதைக்கு இந்தப் பெயர் இருக்கட்டும் (சில சமயம் மறுபதிப்பில் இந்த பெயர் குறுக்க வேலைகள் நடப்பதும் உண்டு)--சோடாபாட்டில்உரையாடுக 08:25, 18 சனவரி 2011 (UTC)Reply
  • இணைய பலகலைக்கழகத்திலேயே இன்னொரு பாடத்தில் ”குளத்தங்கரை அரசமரம்” என்றே போட்டிருக்கிறது. மேலும் வாவேசுவின் தமிழ்மணி/தினமணி புரஃபைலிலும் அப்படியே இருக்கிறது. மீண்டும் மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:31, 18 சனவரி 2011 (UTC)Reply

ஸ்மார்த்த விசாரம் தொகு

பாலுறவைக் கண்காணிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு வைத்திருந்த ஒரே சாதி நம்பூதிரிகள்தான் என்று சொல்லும் இந்தக் கட்டுரையைக் கவனியுங்கள் ஸ்மார்த்த விசாரம் --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:46, 18 சனவரி 2011 (UTC)Reply

ஜெயமோகன் தொகு

ஜெ த.வி.யில் பங்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ”என் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் இருந்து சிலவற்றை நான் வலையேற்றம் செய்கிறேன் -தகவல்கட்டுரைகளை. அவற்றுக்கு காப்புரிமை இல்லை. நீங்கள் செய்தாலும் சரி” என்று கூறியுள்ளார். எனவே காப்புரிமை இல்லாத அவருடைய கட்டுரைகளை விக்கி மூலத்திலும் இட்டு அவற்றை விக்கிபடுத்தி த.வி.யிலும் இடலாமே! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 13:29, 18 சனவரி 2011 (UTC)Reply

எல்லாவற்றையும் இடாததற்கு காரணம் வேலைப்பளுதான் :-) - விக்கியாக்க வேலைகள் நிறைய உள்ளன. (எ.கா, விமர்சன நடையினையும், அவரது சொந்தக் கருத்தினையும் நீக்குதல்). அவரே இங்கு இடும் போது பார்த்து விமர்சனத்தைக் குறைத்து இடுவதால் விக்கியாக்க முயற்சியைக் குறைவாகச் செய்தால் போதுமென உள்ளது. நாம் அப்படியே உருவினால் நிறைய வேலை செய்ய நேரிடும் :-). எனவே மொத்தமாக அங்கிருந்து எடுக்கவில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 13:37, 18 சனவரி 2011 (UTC)Reply

நல்லது. நீங்கள் சொல்வதும் சரியே! புதுப் பயனைரத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 13:47, 18 சனவரி 2011 (UTC)Reply

மின்னஞ்சல் தொகு

தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை நான் எங்கு காண்பது. தாங்கள் பொதுவெளியில் வெளிப்படுத்த விரும்பவில்லையெனில் என்னுடைய பயனர் பெயர் அட் ஜி மெயில் டாட் காம் - க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 13:49, 18 சனவரி 2011 (UTC)Reply

sodabottle அட் gmail என்பதே என் மின்னஞ்சல் முகவரி.--சோடாபாட்டில்உரையாடுக 14:21, 18 சனவரி 2011 (UTC)Reply
Return to the user page of "Sodabottle/தொகுப்பு03".