பயனர் பேச்சு:TNSE silambu dpi/மணல்தொட்டி

தொடர்ந்து உங்களின் பதிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. விக்கி தொகுத்தலுக்கான குறிப்புகள் தேவைப்படின் இப்பக்கத்திலோ அல்லது எனது எண்ணுக்கோ காலை 10-12 வரை அழைக்கவும். தமிழ் தழைக்க, தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தலை வணங்குகிறேன். உங்கள் மாவட்டத்தில் ஆர்வமுள்ள 4 நபர்கள் இருந்தால், எனது செலவில் நேரில் வரவும் அணியாமாக உள்ளேன்.அரசு தரும் வசதிகளை எதிர்பார்க்கவில்லை. இணைய இணைப்பு வசதிகளோடு தங்களை என்னால் சந்திக்க முடியும். எமக்குத் தேவை ஆர்வமுள்ள, வினாக்களோடு செயற்படும் 4 நபர்கள். அவ்வளவே. முதலில் உங்களைப் போன்றதொரு ஆர்வம், அதனுடன் காப்புரிமையற்றத் தரவு, அதனை மொழிபெயர்க்கும் திறன், மணல் தொட்டி என்ற பயிலுடமித்தில் தொடர்ந்து செயற்படுதல், இறுதியாக விக்கி வடிவம். இப்படிகளே, தமிழை ஒரு படி முன்னேற்றும். தமிழகத்தினைப் பற்றி ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளன. அவை தமிழில் கொண்டு வர கேட்டுக் கொள்கிறேன்.சில எடுத்துக்காட்டுகளைக் காணவும்.

மணல்தொட்டி என்னும் பயிலுமிடத்தில் எழுதி சரிபார்த்த பின்புதான், கட்டுரையை வெளியிட வேண்டும். அப்பொழுதே பிறமொழியினரால் நமது தமிழ் விக்கிப்பீடியா போற்றப்படும். வணக்கம்.--உழவன் (உரை) 08:29, 12 மே 2017 (UTC)Reply

Return to the user page of "TNSE silambu dpi/மணல்தொட்டி".