பரப்பநாடு

கேரளாவிலிருந்த ஒரு அரசு

பரப்பநாடு (Parappanad) என்பது இந்தியாவின் மலபாரில் ஒரு முன்னாள் நிலப்பிரபுத்துவ சுதேச மாநிலமாக இருந்தது. [1] பரப்பநாடு அரசக் குடும்பத்தின் தலைமையகம் இன்றைய மலப்புறம் மாவட்டத்திலுள்ள பரப்பனங்காடி என்ற ஊரில் இருந்தது. பொ.ச.1425ஆம் ஆண்டில், நாடு வடக்கு பரப்பநாடு (பேப்பூர் இராச்சியம்), தெற்கு பரப்பநாடு (பரப்பூர் சொரூபம்) எனப் பிரிக்கப்பட்டது. தெற்கு பரப்பநாட்டில் திரூரங்கடியும், பரப்பனங்காடி நகரமும் அடங்கும். வடக்கு பரப்பநாடு (பேப்பூர் இராச்சியம் அல்லது கரிப்பா கோவிலகம்) பன்னியங்கறை, பேப்பூர், கோழிக்கோடு வட்டத்தின் செருவண்ணூர் ஆகியவையும் அடங்கும்.

செங்கடல் செலவின் பெயர்கள், வழிகள், இடங்கள் (பொ.ச. 1 ஆம் நூற்றாண்டு)

பரப்பநாட்டின் ஆட்சியாளர்கள் கோழிக்கோடு நாட்டின் சாமோரியன்களின் கீழ் ஆண்டு வந்தனர். மேலும் வடக்கே பேப்பூர் துறைமுகம் வரை அதிகார வரம்பைக் கொண்டிருந்தனர். இடைக்காலத்தின் ஆரம்பத்தில், கோழிக்கோடு, பரப்பநாடு மலபார் கடற்கரையில் ஒரு முக்கியமான கடல் வர்த்தக மையமாக வளர்ந்தது. பின்னர் இது பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் மலபார் மாவட்டத்தில் ஏறநாடு வட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.

வரலாறு தொகு

திப்பு படையெடுப்பைத் தொடர்ந்து, அரச குடும்பம் திருவிதாங்கூருக்கு தப்பி ஓடியது. எவ்வாறாயினும், சண்டை முடிந்த பின்னர், பரப்பநாடு அரச குடும்பம் பிரிட்டிசு அரசாங்கத்திடமிருந்தும் திருவிதாங்கூர் அரசாங்கத்திடமிருந்தும் ஓய்வூதியத்தை ஏற்க ஒப்புக்கொண்டு, திருவிதாங்கூர் மாநிலத்தில் தங்கியிருந்தது. அப்போதைய திருவிதாங்கூர் அரசனான கார்த்திகைத் திருநாள் இராமவர்மன், இவர்களை சங்கணாசேரி அரண்மனையில் தங்க அனுமதித்தார். பின்னர், கார்த்திகை திருநாள் லட்சுமி பாயின் ஆட்சிக் காலத்தில், ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டு இவர்கள் அங்கு இடம் பெயர்ந்தனர். அந்த நேரத்தில் சங்கணாசேரியில் லட்சுமிபுரம் அரண்மனை ஹரிப்பாடு அரண்மனை இவர்களால் கட்டப்பட்டது.

பிரபலங்கள் தொகு

மலையாள மொழிக் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் [2] இவர் மலபாரின் அரச குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்தார். இவர் கேரளாவின் காளிதாசர் என்றும் அழைக்கப்படுகிறார். [3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Logan, William (2006). Malabar Manual, Mathrubhumi Books, Calicut. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8264-046-7
  2. Paniker, Ayyappa, "Modern Malayalam Literature" chapter in George, K. M., editor, ' 'Modern Indian Literature, an Anthology' ', pp 231, 236 published by Sahitya Akademi, 1992, retrieved 10 January 2009
  3. Sreedhara Menon, A. Cultural Heritage of Kerala. p. 199.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பநாடு&oldid=3179895" இலிருந்து மீள்விக்கப்பட்டது