பரமேசுவர் கோத்ரெஜ்

பரமேசுவர் கோத்ரெஜ் (Parmeshwar Godrej) என்பவர் கோத்ரெஜ் தொழில் குழுமத் தலைவர் அதி கோத்ரேஜ் என்பவரின் மனைவி ஆவார்[1]. சமூக நலனுக்காகப் பல செயல்பாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கிய கொடையாளராகக் கருதப்படுகிறார்.[2]

பரமேசுவர் கோத்ரெஜ்
இறப்பு10 அக்டோபர் 2016
Breach Candy Hospital
பணிSocialite

வாழ்வும் பணிகளும் தொகு

திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தில் வானூர்திப் பணிப் பெண்ணாக இருந்தார்[1]. சீக்கியக் குடும்பத்தில் பிறந்த[3] பரமேசுவர் கோத்ரெஜ் ஆடைகளை வடிவமைப்பதிலும், இல்லங்களை அலங்கரிப்பதிலும், கலையுணர்வுடன் வாழ்வதிலும் ஈடுபாடு காட்டியவர்.

2004 ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய் விழிப்புணர்வைப் பரப்ப ஹீரோஸ் பிராஜக்ட் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். இம்முயற்சியில் ஆலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், பில் மற்றும் மெலிந்தா அறக்கட்டளை, கிளிண்டன் குளோபல் நிறுவனம் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.[4][5][6][7]

பாலிவுட் நடிகை ஏம மாலினி மற்றும் நடிகரும் இயக்குநருமான பெரோசு கான் ஆகியோருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தார்.

70 ஆண்டு அகவையான பரமேசுவர் கோத்ரெஜ் 2016, அக்தோபர் 10 இல் நோய்வாய்ப்பட்டு மும்பையில் காலமானார்[8].

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 "The Sunday Tribune - Spectrum".
  2. http://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/parmeshwar-godrej-a-woman-of-style-substance-passes-away/articleshow/54802427.cms
  3. May 1, 2011, PEDIGREE APART, Vimla Patil
  4. http://www.gatesfoundation.org/Media-Center/Press-Releases/2004/07/Healing-the-Divide-Receives-Grant
  5. "Parmeshwar Godrej's dream goal". dna. 12 March 2010.
  6. "Heroes Project". Archived from the original on 2013-09-01. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.
  7. "Richard Gere and Parmeshwar Godrej Launch The Heroes Project To Mobilize Societal Leaders and the Media Industry to Fight AIDS in India". Bill & Melinda Gates Foundation.
  8. Abrol, Somya (11 October 2016). "Socialite and businesswoman Parmeshwar Godrej passes away". India Today. http://m.indiatoday.in/story/parmeshwar-godrej-death-adi-godrej-heroes-project-lifest/1/784595.html. பார்த்த நாள்: 11 October 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேசுவர்_கோத்ரெஜ்&oldid=3945711" இலிருந்து மீள்விக்கப்பட்டது