பரிவேடம் (halo) என்பது பரிதியையோ நிலவையோ சுற்றிக் காணப்படும் ஒளிவட்டமாகும். இது மெல்லிய, வெண்ணிறங் கொண்ட குருள் மேகங்களில் (cirrus clouds) காணப்படும் பனிப்படிகங்களால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்படிகங்கள் சிறு அறுங்கோணப் பட்டகங்களைப் போலச் செயல்பட்டு வெண்ணிற அல்லது வண்ணப் பரிவேடத்தை உருவாக்குகின்றன. கதிரவனைச் சுற்றிக் காணப்படும் பெரிய பரிவேடத்திற்கு அகல்வட்டம் என்றொரு பெயரும் உண்டு [1](அகல்வட்டம் பகல்மழை என்பர்). இவ்வகை ஒளிவட்டங்கள் அரிதானவையே அல்ல; உலகின் வெவ்வேறு பகுதிகளில் வருடம் முழுவதும் இவை ஏற்படுகின்றன.[2]

பதாங்கில் தென்பட்ட அகல்வட்டம்

22 0 பரிவேடம் தொகு

வானில் பொதுவாகத் தென்படும் பரிவேடம் 22 0 பரிவேடம் என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், இப்பரிவேடம் கதிரவனிலிருந்து (அல்லது நிலவிலிருந்து) 22 0 தொலைவில் இருக்கிறது. கதிரவன், நிலவு இவ்விரண்டும் வானத்தின் 1/2 0 அளவிலான பகுதியை மறைப்பவை; எனவே, 22 0 அளவானது கதிரவன் அல்லது நிலவு இவற்றை விட 44 மடங்கு பெரியதாக இருக்கும்.[3]

கண் பாதுகாப்பு தொகு

அகல்வட்டத்தை நேரடியாக வெற்றுக் கண்ணாலோ, குளிர்க்கண்ணாடியினாலோ, தண்ணீரில் / கலங்கிய நீரில் எதிரொளிப்பிலோ, இன்னபிற கருவிகளைக் கொண்டோ காணக்கூடாது; சூரியன்-தொடர்பான எந்தவொரு வானியல் நிகழ்வையும் காண விரும்புவோர், போதிய பாதுகாப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

பாதுகாப்பான முறைகளுக்கு தொகு

காண்க.சூரிய கிரகணங்களைப் பாதுகாப்பான முறையில் காண்பது எவ்வாறு? கங்கணகிரகணம்

மேற்கோள்கள் தொகு

  1. சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலியிலிருந்து[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Atmospheric Optics தளத்திலிருந்து". Archived from the original on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2010-07-12.
  3. Universe Today தளத்திலிருந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவேடம்&oldid=3860387" இலிருந்து மீள்விக்கப்பட்டது