பரேசஹரியா பவோனா

பரேச்சஹரியா பவோனா (Baresahariya Bhaona) என்பது அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான ஜமுகுரிஹாட்டில் ஒவ்வொரு 5–6 வருடங்களுக்கும் நிகழ்த்தப்படும் ஒரு 200 ஆண்டு பழமையான நாடக விழாவாகும். [1] திருவிழா முதன்முதலில் 1797-98 இல் நடைபெற்றது. கயன் போரா என்பவர் தலைமையில் அசாமின் பாரம்பரிய இசைக்கருவிகளான டோபா, கான், போர்டல், கோல் ஆகியவற்றின் ஒலிகள் பார்வையாளர்களிடையே இசைக்கப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த பாரம்பரியம், ஜமுகுரிஹாட் என்ற சிறிய நகரத்தில் இன்றும் வாழ்கிறது.

பரேசஹரியா பவோனா
பரேச்சஹரியா பவோனா மகோத்சவ நுழைவு
நிகழ்நிலைஇன்றும் செயல்பாட்டில் இருக்கிறது
வகைஇந்துத் திருவிழா
அமைவிடம்ஜமுகுரிஹாட், சோணித்பூர், அசாம்
நாடுஇந்தியா
முதல் நிகழ்வு1797-98
அமைப்பாளர்(கள்)ஜமுகுரிஹாட்டின் மக்கள்
இணையத்தளம்www.barechahariabhowna.com

வரலாறு தொகு

1797 ஆம் ஆண்டில் அசாமின் ஜமுகுரிஹாட்டில் உள்ள பசிகான் கிராமத்தின் ரகுடோலோனி-போத்தர் (நெல் வயல்) என்ற இடத்தில் ஹுகாய் தேககிரி என்பவர் முதன்முதலில் ஏற்பாடு செய்தார். திருவிழா தொடங்கியதிலிருந்து 220 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அசாமி நாட்காட்டியின்படி இந்தத் திருவிழா ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சோட் பௌர்ணமி நாளில் (வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில்) கொண்டாடப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில் ஏப்ரல் போர்டோய்சிலா ("இடியுடன் கூடிய மழை") உடன் மோதலைத் தவிர்ப்பதற்காக இந்த நிகழ்வை பாகூனின் பௌர்ணமி நாளில் (வழக்கமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில்) கொண்டாட உள்ளூர்வாசிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். மதம் மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைப்பு இந்த திருவிழாவை பல ஆண்டுகளாக உயிர்வாழ ஒரு வலுவான இணைப்பைக் கொடுத்துள்ளது, அதே நேரத்தில் அதன் கதை சொல்லும் தரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பொதுவாக பாவோனா என்பது இராமாயணம், மகாபாரதம் போன்றபுராணக் கதைகளின் நாடகமாக்கலாகும். இருப்பினும், சங்கர்தேவ் என்பவர் உருவாக்கிய இந்த பாணியில், ஒரு வைணவத் துறவி பக்தி இரசத்துடன் வெவ்வேறு இராக, தாள வடிவத்தில் சித்தரிக்கிறார். அவரது முக்கிய குறிக்கோள், மாறுபட்ட சமுதாயத்தை பொழுதுபோக்கு மனப்பான்மையுடன் ஒன்றிணைத்து, வைணவத்தை ஊக்குவிப்பதாகும்.

பாவோனா பழக்கவழக்கங்கள் தொகு

இது ஆரம்பத்தில் நாம்காரிலும், கேல் என்ற கிராமப் பிரிவின் பாரம்பரிய பிரார்த்தனை இல்லத்திலும், சங்கர்தேவ் நிறுவிய சங்கரி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் மடாலயம் போன்ற ஒரு நிறுவனமான சத்திரத்திலும் நடைபெற்றது. பாரம்பரியமான பாவோனாவில், சங்கரி பாணியில் இசைக்கும் குழு பாடகர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து சூத்திரதாரின் சுலோகங்களைப் பாராயணம் செய்து நாடகத்தின் முழு கதையையும் விவரிக்கப்படிகிறது. கயன்போரா என்று அழைக்கப்படும் இயக்குனர், மேடையில் எப்போது நுழைவது என்பதை மற்ற கலைஞர்களுக்கு தெரியப்படுத்துவார். நாம பிரசங்கம் என்றால் கீர்த்தனையுடன் இணைந்த பாவோனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். [2]

மேற்கோள்கள் தொகு

  1. TI Trade (2012-11-08). "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 2014-01-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.
  2. "Dance-drama extravaganza in Assam with 2,500 actors". News.webindia123.com. 2007-04-01. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேசஹரியா_பவோனா&oldid=3070011" இலிருந்து மீள்விக்கப்பட்டது