பர்கன்டி கலவை

பர்கன்டி கலவை (Burgundy mixture) என்பது போர்டோ கலவையைப் போல் பயன்படுத்தும் ஒரு பூசணக் கொல்லியாகும்.

தேவையான பொருட்கள் தொகு

செய்முறை தொகு

ஒரு கிலோ மயில் துத்தம் மற்றும் ஒரு கிலோ சோடியம் கார்பனேட்டு இவைகளை ஒன்றாக பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து பசையாக உருவாக்க வேண்டும். மரத்தில் ஏற்படும் காயங்களுக்கும் மற்றும் கவாத்து செய்வதால் ஏற்படும் காயங்களுக்கும் இதை பூச வேண்டும். அவ்வாறு வெட்டு காயங்களைப் பாதுகாக்கா விட்டால் எளிதாக பூசணம், பக்டீரியா, நுண்ணுயிரிகள் போன்றவை உள்சென்று நோய்களை உருவாக்கும்.

வரலாறு தொகு

மாசன் என்பவர் 1887 ஆம் ஆண்டில் பிரான்சில் பர்கன்டி இடத்தில் போர்டோ கலவைக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தியதால் பர்கன்டி கலவை என்று அழைக்கப்பட்டது. பர்கன்டிகலவையை போர்டோ கலவையைப் போல் தயார் செய்ய வேண்டும். இதில் நீர்த்த சுண்ணாம்பிற்குப் போல் சோடியம் கார்பனேட் சேர்க்க வேண்டும்

உசாத்துணை தொகு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோவை வெளியிட்ட பயிர்நோயியல் மற்றும் நூர்புழுவியல் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கன்டி_கலவை&oldid=3343184" இலிருந்து மீள்விக்கப்பட்டது