பர்தாப் சிங் சங்கர்

இந்திய அரசியல்வாதி

பர்தாப் சிங் சங்கர் (Partap Singh Shankar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குருத்வாரா சீர்திருத்த இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். [2]

பார்த்தப் சிங் சங்கர்
Partap Singh Shankar
தலைவர், சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு[1]
பதவியில்
18 சூன் 1933 - 13 சூன் 1936
முன்னையவர்கோபால் சிங் குவாமி
பின்னவர்தாரா சிங் (செயற்பாட்டாளர்)
பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1923 - 1930
முன்னையவர்பல்வந்து சிங்
பின்னவர்குர்பச்சன் சிங்
தொகுதிசலந்தர் (சீக்கிய கிராமப்புறம்)

சலந்தரில் உள்ள சரிகார் கிராமத்தில் பர்தாப் சிங் சங்கர் பிறந்தார். சலந்தரில் பஞ்சாப் ராணுவத்தில் வைசுராயாக பணியாற்றினார். [3] இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் சுவரண் சிங்கின் தந்தையாகவும் பர்தாப் சிங் அறியப்படுகிறார். சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவின் தலைவராக கோபால் சிங் குவாமியின் ஒரு நாள் பதவிக்காலத்திற்குப் பிறகு, 1933 ஆம் ஆண்டில் பர்தாப் சிங் பொது அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். [3] 1923 மற்றும் 1926 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் சலந்தர் (சீக்கிய-கிராமப்புற) தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. SGPC former Presidents. Retrieved 21 January 2022.
  2. Akali Lehar de Mahan Neta (Punjabi). Book by Partap Singh, Giani 1976.
  3. 3.0 3.1 3.2 Sikh Political figures-Partap Singh. thesikhencyclopaedia.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தாப்_சிங்_சங்கர்&oldid=3835739" இலிருந்து மீள்விக்கப்பட்டது