பர்தீப் மோர்

பர்தீப் மோர் (Pardeep Mor) ஓர் இந்திய தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீரராவார்[1]. 1992 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதி இவர் பிறந்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுவாக வளை கோல் பந்தாட்டத்தின் போது தடுப்பு ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

சாதனைகள் தொகு

இரியோ டி செனீரோவில் நடைபெற்ற 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் வளைகோல் பந்தாட்ட அணியில் இடம் பிடித்தார்[2]. 2015 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்காக கலிங்கா இலேன்சர் நிறுவனம் இவரை $37,000 கொடுத்து ஏலத்தில் எடுத்தது[3]. 16 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. அரியானாவிலுள்ள சோனிபத்தில் அமைந்திருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பர்தீப் மோர் ஒரு உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
  3. http://www.india.com/sports/live-hockey-india-league-players-auction-live-updates-of-hil-2015-auction-555726/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தீப்_மோர்&oldid=3561900" இலிருந்து மீள்விக்கப்பட்டது