பற்றுக்காய் உத்தி

சதுரங்க விளையாட்டில் பற்றுக்காய் உத்தி(Skewer) என்பது ஊடுகதிர் தாக்குதல் அல்லது எக்சு கதிர் தாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. சதுரங்க ஆட்டத்தில் செருகி உருவாக்கும் இக்கட்டான நிலை போலவே பற்றுக்காய் உத்தியும் இத்தகைய நிலைப்பாட்டை எதிரிக்கு உண்டாக்குகிறது. உண்மையில் பற்றுக்காய் சில சமயங்களில் எதிர் செருகி என்றும் அழைக்கப்படுகிறது. செருகி, பற்றுக்காய் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் பற்றுக்காய் உத்தியில் அதிக மதிப்புடைய காய் முன்பாகவும் குறைவான மதிப்புள்ள காய் பின்னாலும் இருக்கும். இதனால் எதிரி அதிகமதிப்புள்ள காயை வேறு இடத்திற்கு நகர்த்த வலியுறுத்தப்படுகிறார். குறைவான மதிப்புடைய காயை தாக்குபவர் கைப்பற்றிக் கொள்ளலாம்[1]. ( பார்க்கவும்: சதுரங்க காய்களின் சார்பு மதிப்பு ) நீண்ட தூரம் தாக்க வல்லமை கொண்ட இராணி , யானை மற்றும் அமைச்சர் போன்ற காய்கள் பற்றுக்காய்களாக முடியும்.


வகைகள் தொகு

பற்றுக்காய்களை, இலக்குப் பற்றுக்காய் . சார்புப் பற்றுக்காய் என இரண்டு வகையாக பிரிக்கலாம். இலக்குப் பற்றுக்காய் உத்தியாக இருந்தால் அங்கு அரசர் முற்றுகையில் இருப்பார். சதுரங்க விதிகளுக்கு உட்பட்டு அரசரை கட்டாயமாக முற்றுகையில் இருந்து விடுவிக்க முயலவேண்டும். சார்புப் பற்றுக்காய் உத்தியெனில் அங்கு அரசரைத் தவிர பிற காய்கள் தாக்கப்படும் அபாயத்தில் இருக்கும். எனவே இங்கு தாக்கப்படும் காயைத்தான் நகர்த்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

சார்புப் பற்றுக்காய் தொகு

abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வெள்ளை அமைச்சர் கருப்பு இராணியை பற்றுக்காயாக வைத்து கருப்பு யானையைக் கைப்பற்றுகிறார்

அருகிலுள்ள படத்தில் கருப்பு நகர்வை செய்ய வேண்டும். வெள்ளை அமைச்சர் கருப்பு இராணியை பற்றுக்காயாக வைத்து யானையைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். யானையை விட இராணியின் சார்பு மதிப்பு அதிகமென்பதால் இராணியை கட்டாயமாக காப்பாற்ற வேண்டிய நிலையில் கருப்பு உள்ளார். எனவே அடுத்த நகர்வை இராணியை வேறு இடத்திற்கு நகர்த்துவார். வெள்ளைக்கு கருப்பு யானை கிடைக்கிறது. இந்த உத்தியே சார்புப் பற்றுக்காய் உத்தி எனப்படுகிறது.

இலக்குப் பற்றுக்காய் தொகு

abcdefgh
8
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கருப்பு அமைச்சர் வெள்ளை இராசாவை பற்றுக்காயாக வைத்து வெள்ளை இராணியைக் கைப்பற்றுகிறார்.

அருகிலுள்ள படத்தில் வெள்ளை நகர்வை செய்ய வேண்டும். கருப்பு அமைச்சர் வெள்ளை அரசரை பற்றுகாயாக வைத்து இராணியைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அரசரை பற்றுக்காயாக்கி திட்டமிடுவதுதான் இலக்குப் பற்றுக்காய் உத்தி எனப்படும். இங்கு கட்டாயமாக அரசரைத்தான் நகர்த்த வேண்டும். இதனால் கருப்புக்கு வெள்ளை இராணி கிடைக்கிறது. அதிக மதிப்புடைய காய் நேரடியாகத் தாக்கப்படுகிறது என்பதால் செருகியை காட்டிலும் பற்றுக்காய் உத்தி பயனுள்ளதாக கருதப்படுகிறது.

போட்டியிலிருந்து உதாரணம் தொகு

சார்ட்டு எதிர் வகானியன்
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
51.Be5+நகர்வுக்குப் பின்னர், 51...Kxe5 52.Qc3+ பற்றுக்காய்

1989 ஆம் ஆண்டில் நைகல் சார்ட்டு மற்றும் ரபேல் வகானியன் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் வெள்ளை தன்னுடைய அமைச்சரை தியாகம் செய்து இலக்குப் பற்றுக்காய் உத்தியின் மூலமாக கருப்பு இராணியைக் கைப்பற்றுகிறது[2]. வெள்ளை கடைசியாக 51. Be5+ என்று விளையாடியுள்ளார். கருப்பு 51...Kxe5 என்று விளையாடினால் வெள்ளை 52.Qc3+ என்று விளையாடி கருப்பு இராணியைக் கைப்பற்றிவிடலாம். கருப்பு தோல்வியை ஏற்றுக் கொண்டு விலகுகிறார்.


குறிப்புகள் தொகு

  1. Reinfeld, Fred (1955). 1001 Winning Chess Sacrifices and Combinations. Wilshire Book Company. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87980-111-5. பார்க்கப்பட்ட நாள் 10-01-2010. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  2. Short vs Vaganian

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு


வெளிப்புற இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்றுக்காய்_உத்தி&oldid=3580858" இலிருந்து மீள்விக்கப்பட்டது