பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (Matriculation) என்பது ஒரு பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான முறையான செயல்முறை அல்லது பதின்நிலைத் தேர்வு போன்ற சில கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்குத் தகுதி பெறுவதனைக் குறிப்பதாகும்.

ஆக்சுபோர்டில் உள்ள செல்டோனியன் அரங்கில் பதின்நிலை விழாவிற்கு வருகை தரும் மாணவர்கள்

இந்தியா தொகு

இந்தியாவில், பதின்நிலை (மெட்ரிகுலேசன்) என்பது பத்தாம் வகுப்பின் இறுதி முடிவுகளைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மேலும், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது மாநில வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் பெறப்படும் தகுதி, " பதின்நிலைத் தேர்வுகள்" எனப்படுகிறது.

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலம் முதலே 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் தேர்வுகளுக்கு முறையே பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மற்றும் இடைநிலைத் தேர்வு போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் இந்த விதிமுறைகள் 'O' அல்லது அடிப்படை நிலைத் தேர்வுகள் (தற்போது GCSE என அழைக்கப்படுகின்றன) என அழைக்கப்படுகிறது.

அறிவியல் பாடங்கள் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பிராந்திய மொழிகளும் விருப்ப மொழியாக உள்ளது. பதின்நிலை அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் 15-16 வயதுடையவர்களாக உள்ளனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஒரு மாணவர் மேல்நிலைப் பள்ளியில் தொடரலாம். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் 17-18 வயதுடையவர்களாவர். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் ICSE வாரியங்கள் தேசிய அளவில் பன்னிரண்டாம் வகுப்பு படிப்புகளை நடத்துகின்றன, அதே நேரத்தில் மாநில வாரியங்கள் மாநில அளவில் செயல்படுகின்றன. அடிப்படை பாடத்திட்டம் CBSE ஆல் பரிந்துரைக்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் நடுவன் வாரியப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.  NTSE, NSO, NSTSC போன்ற பதின்நிலைத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "NTSE Eligibility". ntseguru.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.

வெளி இணைப்புகள் தொகு