பல அங்கத்துவ தேர்தல் தொகுதி (இலங்கை)

இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கான காப்பீட்டு ஏற்பாடுகளுள் ஒன்றாக 1947ம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இரட்டை அங்கத்தவர் அல்லது பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1959ல் அரசியலமைப்பின் புதுச்சேர்க்கை விதிகளுக்கமைய இலங்கையில் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின்போது பல அங்கத்துவ அல்லது இரட்டை அங்கத்துவ தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. விசேடமாக ஒரு தொகுதியில் அண்ணளவாக சிறுபான்மையினரும், பெரும்பான்மையினரும் அல்லது இரண்டு சிறுபான்மை இனத்தவர்கள் சமனாக வசிப்பார்களாயின் இவர்களுக்கும் தத்தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இதன் முலம் வழங்கப்பட்டது.

இதன்படி 6 தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும், பல அங்கத்தவர் தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு மொத்தம் 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எண்ணிக்கை வருமாறு:

  • பேருவளை தேர்தல் தொகுதி
தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை - 02
  • மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை - 02
  • பொத்துவில் தேர்தல் தொகுதி
தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை - 02
  • ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி
தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை - 02
  • கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி
தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை - 03
  • நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதி
தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் எண்ணிக்கை - 03

இலங்கையில் 1978ம் ஆண்டு இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டதையடுத்து மேற்படி விதி நீக்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு