பழைய தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
பழைய தருமபுரி அல்லது ஹலே தருமபுரி (Haledharmapuri) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
பழைய தருமபுரி
ஹலே தருமபுரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636701 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மக்கள் வகைபாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4,902 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2,381 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2,521 என்றும் உள்ளது. மொத்த எழுத்தறிவு விகிதம் 71.27 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.