சங்ககாலத்தில் தொண்டை நாட்டில் இருந்த ஊர் பவத்திரி.

அக்காலத்தில் அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் பொலம்பூண் திரையன்.

இந்த ஊர் ‘பல்பூங் கானல்’ எனச் சிறப்பிக்கப்படுவதால் கானல் இருக்கும் கடற்கரைப் பகுதியில் இருந்தது என்பது தெளிவாகிறது.

தலைவியின் அழகு இந்த ஊர்போல் பொலிவுடன் திகழ்ந்தது எனப் பாடல் கூறுவதால் இந்த ஊரின் அழகை உணரமுடிகிறது. [1]

அடிக்குறிப்பு தொகு

  1. செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங் கானல் பவத்திரி அன்ன இவள் நல்லெழில் இளநலம் - நக்கீரர் பாடல் அகநானூறு 340
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவத்திரி&oldid=894645" இலிருந்து மீள்விக்கப்பட்டது