பவநகர் துறைமுகம்

இந்தியத் துறைமுகம்

பவநகர் துறைமுகம் (Bhavnagar Port) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் சௌராட்டிரா பகுதியில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பவநகர் துறைமுகமானது தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் செங்கடல் துறைமுகங்களுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளது.[1][2][3]

21°48′வடக்கு 72°09′கிழக்கு என்ற ஆள் கூறுகளில் அமைந்துள்ள அசல் துறைமுகமான பவநகர் துறைமுகம் குசராத்து வர்த்தகத்தின் மிக முக்கியமான பகுதியாகும். 1860 ஆம் ஆண்டு முதல் கடல் போக்குவரத்திற்கான கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தது. பின்னர் 1930 ஆம் ஆண்டில் பவநகர் மாநிலத்தின் துறைமுக அதிகாரியாக இருந்த யே. இயான்சுடன் மேற்பார்வையின் கீழ் துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி கிடங்குகள் மற்றும் இரயில் போக்குவரத்து ஆகியவை துறைமுகத்துடன் சேர்க்கப்பட்டன. பழைய துறைமுகத்தில் அதிக மண் படிந்ததால், அசல் துறைமுகத்திலிருந்து 8 கிமீ தெற்கே ஒரு புதிய துறைமுகம் கட்டப்பட்டு 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த துறைமுகத்தில் ஒரு கலங்கரை விளக்கமும் இருந்தது, இது 2001 பூகம்பத்தில் சேதமடைந்தது.[4][5][6]

பவநகர் துறைமுகத்தின் வடிவமைப்பிற்கு புரூசு வொய்ட்டு என்ற பொறியாளரின் நிறுவனம் பொறுப்பேற்றது. சிசுவிக் மேம்பாலம் மற்றும் மும்பை கடல் எண்ணெய் முனையம் ஆகியவையும் இதே நிறுவனத்தின் மேற்பார்வையில் இருந்தன. பவ்நகர் கால்வாய் கதவு 1963 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வகையில் இந்தியாவில் கட்டப்பட்ட, குசராத்தில் உள்ள பழமையான முதல் கட்டமைப்பு என்ற சிறப்பும் இதற்கு உண்டு. குறைந்த அலைகளின் போது கப்பல்களை மிதக்க வைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Bhavnagar Port". Archived from the original on 5 October 2015. பார்க்கப்பட்ட நாள் 4 October 2015.
  2. "History of Bhavnagar". Archived from the original on 2018-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
  3. Projects Monitor
  4. "Bhavnagar Old Port Lighthouse". Archived from the original on 14 August 2007. பார்க்கப்பட்ட நாள் 10 June 2008.
  5. http://www.sezindia.nic.in/index.asp
  6. Lloyd's List Ports of the World. Informa Pub. Group. 2007. p. 595. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843116905.
  7. A casual interview பரணிடப்பட்டது 14 மே 2006 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க தொகு

  • Mulberry – The Return in Triumph by Michael Harrison, 1965
  • A Harbour Goes To War: The Story of Mulberry and the Men Who Made It Happen - J. Evans, R. Walter, E. Palmer; publisher - South Machars Historical Society, 2000

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவநகர்_துறைமுகம்&oldid=3791459" இலிருந்து மீள்விக்கப்பட்டது