பவுலா நடவடிக்கை

பவுலா நடவடிக்கை (ஆங்கிலம்: Operation Paula, ஜெர்மன்: Unternehmen Paula) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். சூன் 3ம் தேதி நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே பிரஞ்சு வான்படையைத் தாக்கி அழிக்க முயன்று தோல்வியடைந்தது.

பவுலா நடவடிக்கை
பிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி
A picture of a Heinkel He 111 with running engine
தாக்குதலுக்கு தயாரகும் ஜெர்மானிய ஹெயின்கெல் ஹெச். ஈ. 111 ரக விமானங்கள் (சூன் 1940)
நாள் சூன் 3, 1940
இடம் பிரான்சு
ஜெர்மானிய முயற்சி தோல்வி
பிரிவினர்
பிரான்சு பிரான்சு நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பிரான்சு ஜோசஃப் வியூல்லெமின் நாட்சி ஜெர்மனி ஹூகோ ஸ்பெர்லே
படைப் பிரிவுகள்
சோன் டி ஆபரேஷன் ஏரியேன் நோர்ட் 1, 2, 4, 5 மற்றும் 8வது ஃபிளீகர் கோர்கள் (வான் படை கோர்)
பலம்
120 சண்டை விமானங்கள் 1,100 விமானங்கள் (460 சண்டை விமாங்கள்)
இழப்புகள்
35 விமானங்கள் (31 சண்டை விமானங்கள்)
906 பேர் (254 கொல்லப்பட்டவர்கள்)
10 விமானங்கள் (4 குண்டு வீசி விமானங்கள்)>

மே 10ம் தேதி தொடங்கிய பிரான்சு சண்டையின் முதல் கட்டம் சூன் முதல் வாரத்தில் முடிவுக்கு வந்தது. ஜெர்மானியப் படைகள் பிரான்சின் தரைப்படைகளை முற்றிலுமாக முறியடித்து விட்டன. பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி ஜெர்மனி வசமாகியது. நேச நாட்டு படைப்பிரிவுகள் தோற்கடிக்கப்பட்டு எஞ்சியவை டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்குத் தப்பின. பிரான்சின் தோல்வி உறுதியான இந்நிலையில் ஜெர்மானியத் தளபதிகள் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினர். பிரான்சின் ஏனைய பகுதிகளைக் கைப்பற்ற லுஃப்ட்வாஃபே வான் ஆளுமை நிலையை அடைவது அவசியமாக இருந்தது. இதனால் எஞ்சியிருந்த பிரான்சு வான்படைப் பிரிவுகளைத் தாக்கி அழிக்க பவுலா நடவடிக்கையை ஜெர்மானியத் தளபதிகள் மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கைக்கு ஐந்து ஜெர்மானிய வான்படைக் கோர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கையைப் பற்றி பிரித்தானிய உளவுத்துறை பிரான்சின் தளபதிகளுக்கு முன்னெச்சிரிக்கை விடுத்திருந்ததால் ஜெர்மானியர் எதிர்பார்த்தது போல பிரான்சின் வான்படையை அழிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தாலும், லுஃப்ட்வாஃபே விரைவில் வானாதிக்க நிலையை அடைந்தது. ஜெர்மானியத் தாக்குதல்களால் சீர்குலைந்திருந்த பிரான்சின் தொழிற்சாலை உற்பத்தியும், பொதுவாக பிரெஞ்சுப் படையினரிடையே நிலவிய குழப்ப நிலையும் பிரான்சு வான்படையைச் செயலிழக்க வைத்துவிட்டன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுலா_நடவடிக்கை&oldid=3925350" இலிருந்து மீள்விக்கப்பட்டது