பாக்கித்தானில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு

பாக்கித்தானில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு (Anti-American sentiment in Pakistan) அங்கு நிகழும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் கொடியினை எரித்தல் போன்ற செயல்பாடுகளில் வெளிப்படையாகத் தெரிகிறது [1][2]. 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கீட்டின் படி பாக்கித்தான் இத்தகைய வெறுப்பு உணர்வை வலிமையாகக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. பாக்கித்தானில் நிலவும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வில் இனவாத அல்லது சமய சார்பற்ற விடயங்களைக் காட்டிலும் அரசியல் விரோதப் போக்குகள் அதிகமாக காணப்படுகின்றன் என்று ஆர்வெல் பரிசு பெற்ற அரசியல் எழுத்தாளர் அனடோல் லிவெனின் கருத்துகள் தெரிவிக்கின்றன[3].

கலாச்சார பிரச்சினைகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்கள் பொதுமக்களின் விரும்பப்படாத நிலைக்கு காரணங்களாகும். அமெரிக்க மக்களின் இசுலாமிய அவமதிப்பு போக்கு கலாச்சார பிரச்சினை குறையாக அறியப்படுகிறது [4]. பாக்கித்தான் மண்ணில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் [5][6], ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் [7][8], நேட்டோ இராணுவக் கூட்டணியின் 2011 ஆம் ஆண்டு பாக்கித்தானிய தாக்குதல், ரேமண்டு ஆலன் டேவிசு நிகழ்வு உள்ளிட்ட மத்தியப் புலானாய்வு முகமையின் நடவடிக்கைகள், 2010 பாக்கித்தான் வெள்ளப்பெருக்கின் போது அமெரிக்கா வெளிப்படுத்திய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்கள் இவ்வெறுப்புணர்விற்கான வெளியுறவுக் கொள்கை நடவடிக்கை காரணங்களாகும் [9].

2014 ஆம் ஆண்டு பெவ் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட வாக்கெடுப்பின் படி 59% பாகித்தானியர்கள் அமெரிக்காவை மிகவும் சாதகமற்றதாக அல்லது ஓரளவு சாதகமற்றதாக கருதினர் என்று 2014 ஆம் ஆண்டு பெவ் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இவ்வெறுப்புணர்வு 2012 ஆம் ஆண்டில் 80% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது[10].

மேற்கோள்கள் தொகு

  1. "All fired up! Pakistani flag makers cash in on anti-US rage". RT news. Autonomous Nonprofit Organization “TV-Novosti”,. 5 Oct 2012. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  2. "Protester dies after inhaling fumes from burning American flag". Fox News. Fox News Network, LLC. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
  3. Mishra, Pankaj (1 May 2011). "Pakistan: A Hard Country by Anatol Lieven – review". The Guardian. https://www.theguardian.com/books/2011/may/01/pakistan-hard-country-anatol-lieven-review. பார்த்த நாள்: 24 August 2016. 
  4. Afzal, Madiha (14 November 2013). "On Pakistani anti-Americanism". The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
  5. Ghund, Yukka (22 January 2006). "Pakistan seeks to quell anti-American sentiments". USA Today/The Associated Press. https://www.usatoday.com/news/world/2006-01-22-pakistan-aziz_x.htm. பார்த்த நாள்: 21 August 2010. 
  6. Stack, Liam (8 July 2009). "Fresh drone attacks in Pakistan reignite debate". The Christian Science Monitor. http://www.csmonitor.com/World/terrorism-security/2009/0708/p99s01-duts.html. பார்த்த நாள்: 21 August 2010. 
  7. "Bin Laden anniversary delicate moment for Obama, Romney". Chicago Tribune. 25 April 2012. http://articles.chicagotribune.com/2012-04-25/news/sns-rt-usa-binladenanniversaryl2e8fj013-20120425_1_laden-s-pakistan-bin-laden-osama. 
  8. "Pakistan's flood victims give USAID chief an earful". CNN. 25 August 2010 இம் மூலத்தில் இருந்து 29 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/08/25/pakistan.camps/#fbid=T1U0ubZTfIK&wom=false. பார்த்த நாள்: 25 August 2010. 
  9. McGivering, Jill (21 August 2010). "Pakistani flood victims' anger at US". BBC News இம் மூலத்தில் இருந்து 22 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.bbc.co.uk/news/world-south-asia-11040904. பார்த்த நாள்: 21 August 2010. 
  10. Craig, Tim (3 May 2015). "After years of tension, anti-American sentiment ebbs in Pakistan". The Washington Post. WP Company LLC. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.

புற இணைப்புகள் தொகு