பாக்கித்தான் கடற்படை நாள்

செப்டம்பர் 8

பாக்கித்தான் கடற்படை நாள் (Navy Day (Pakistan)) 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாக்கித்தான் போரை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பாக்கித்தான் கடற்படையின் சாதனைகளை குறிப்பாக 25ஆவது வெடிகுண்டு கப்பற்படை பிரிவு மூலம் நிகழ்த்தப்பட்ட சோம்நாத்து நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரில் இந்தியாவிற்கு எதிரான அவர்களின் மூலோபாய நடவடிக்கை இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.[1]

கடற்படை நாள்
Navy Day
கடைபிடிப்போர்பாக்கித்தான்
வகைதேசியம்
நாள்செப்டம்பர் 8

வரலாறு தொகு

25ஆவது படைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோம்நாத்து நடவடிக்கையின் நினைவாக, பாக்கித்தான் கடற்படை செப்டம்பர் 8ஆம் தேதியை கடற்படை நாளாக அனுசரிக்கிறது. இந்திய கடற்படைக்கு எதிராக பாக்கித்தான் கடற்படை தனது மிகவும் திறமையான மற்றும் வெற்றிகரமான தன் செயல்திறனை வெளிப்படுத்தியதால் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாக்கித்தான் கடற்படை இந்திய ரேடார் நிலையத்தை வெற்றிகரமாக தாக்கியது மட்டுமின்றி, காசி என்ற நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்டு இந்திய கடற்படைக் கப்பல்களை அதன் கடல் எல்லைக்குள் அடைத்தது.[2][3]

நோக்கம் தொகு

கடற்படைப் போரைத் தங்கள் குறிப்பிடத்தக்க உத்திகள் மற்றும் சூழ்ச்சிகள் மூலம் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த போர் வீரர்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் பாக்கித்தானில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.[1]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "A day to remember in naval history of Pakistan". Thenews.com.pk. 2021-09-08. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
  2. Altaf, Zohaib (September 12, 2020). "Pakistan navy day: the day of an invincible navy". Brecorder.
  3. "8th September marks golden chapter in history of Pakistan Navy: Naval Chief". www.radio.gov.pk.