பாங்கே மாவட்டம்

பாங்கே மாவட்டம் (Banke District) (நேபாளி: बाँके जिल्लाListen, மத்திய மேற்கு நேபாளத்தின் மாநில எண் 5-இல் உள்ள பனிரெண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் நேபாள்கஞ்ச் நகரம் ஆகும்.

நேபாள மாநில எண் 5-இல் பாங்கே மாவட்டத்தின் அமைவிடம்

இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,337 சதுர கிலோ மீட்டர்கள் கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் மக்கள் தொகை 491313 ஆகும். [1] இம்மாவட்ட மக்கள் அவதி மொழி, நேபாளி மொழி மற்றும் உருது மொழி பேசுகின்றனர்.

நேபாள்கஞ்ச், கோஹால்பூர் மற்றும் கஜுரா பஜார் இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் ஆகும்.

புவியியல் மற்றும் தட்ப வெப்ப நிலை தொகு

பாங்கே மாவட்டத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிராவஸ்தி மாவட்டம் மற்றும் பகராயிச் மாவட்டங்கள் எல்லையாக அமைந்துள்ளது.

பாங்கே மாவட்டத்தின் பெரும்பகுதிகள் மேற்கு ரப்தி ஆற்றின் நீரால் வளமையாக உள்ளது.

தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டர்களுக்கும் கீழ் 79.1%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 20.6%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 0.3%

நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி சபைகள் தொகு

 
பாங்கே மாவட்ட நகராட்சிகளும், கிராம வளர்ச்சி சபைகளும்

பாங்கே மாவட்டத்தில் நாற்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி சபைகளும், மூன்று நகராட்சிகளும் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கே_மாவட்டம்&oldid=3099721" இலிருந்து மீள்விக்கப்பட்டது