கங்கை ஆற்றங்கரையில் இருந்த பாடலிபுத்திரம் சங்கப் பாடல்களில் பாடலி என்று குறிக்கப்பட்டுள்ளது.
குறுந்தொகை 75, அகநானூறு 265 ஆகிய பாடல்கள் இதனைக் குறிப்பிடுகின்றன.

பாடல் சொல்லும் செய்தி தொகு

பொன்மலி பாடலி தொகு

பாடலி நகரம் "பொன்மலி பாடலி" என்று போற்றப்பட்டுள்ளது.1 2 இந்த ஊரில் ஓடிய சோணை ஆற்றில் யானைகள் நீராடுமாம்.
. இந்தச் செய்தியின் வழியே 'ஆதிமூலமே' என ஓலமிட்ட ஆனைக்கு ஆதிமூலம் அபயமளித்த புராணக் கதை தோன்றியது.:படுமரத்து மோசிகீரனார் பாடிய குறுந்தொகை 75

பாடலி நகர நந்தர் கங்கைக்கு அடியில் கரந்த நிதியம் தொகு

போர் வெற்றிகளால் பல்புகழ் ஈட்டிய நந்தர் நீர்மிகு பாடலியில் கூடி அங்கு ஓடிய கங்கை ஆற்றுக்கு அடியில் தம் பெருஞ்செல்வத்தை மறைத்து வைத்திருந்தனராம்.(மாமூலனார் பாடிய அகநானூறு 265)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலி&oldid=745698" இலிருந்து மீள்விக்கப்பட்டது