பாணர் (குந்தாபுரா)

கர்நாடகத்தில் வாழும் சாதியினர்

பாணர் (ஒருமையில் பாணா ) என்பவர்கள் இந்தியாவின் கர்நாடகத்தின், உடுப்பி மாவட்டம், குந்தபுரா வட்டத்தில் முக்கியமாகக் வாழும் ஒரு சமூகத்தினராவர். [1] கர்நாடக அரசால் பாணர்கள் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் கன்னடம் பேசுபவர்கள். மேலும் இவர்களின் தாய்மொழியான கன்னடத்திலும், துளு மொழிகளிலும் பாடல் (நாட்டுப்புற பாடல்கள்) பாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். [1] இவர்கள் துளுநாட்டின் துளு பேசும் நாலிகே/ பாணரிடமிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். [1] "பாணா" என்ற சொல் "பாடல்" என்று பொருள்படும் "பண்" என்ற சொல்லிருந்து வந்தது. இவர்கள் கேரளத்தில் பாணன் என்றும் அழைக்கப்படும் சாதியுடன் பெரிய அளவில் ஒத்திருக்கிறார்கள்.  கேரள மாநிலத்தில் பாணன் சாதி பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [2]

சிக்கு வழிபாடு தொகு

கடலோர மாவட்டங்களில் உள்ள எளிய மக்களால் பரவலாக நம்பப்படும் மற்றும் பிரார்த்தனை செய்யப்படும் (ஆவிகள்) நடனத்துடன் இணைந்த நாட்டுப்புற பாடல்களை [1] பாடுவதன் மூலம், ஆவிகளின் குழுவான சிக்குவுக்கு செய்யப்படும் சமய வழிபாட்டை நிகழ்த்துவதில் பாணர் சமூகம் நிபுணத்துவம் பெற்றது. கன்னட மொழியில் பாணர் சமூகம் பாடும் பாடல்கள் பொதுவாக துளு மொழியின் சிறி பதன பாடல்களுடன் தொடர்புடையவை. [1] இவர்கள் பூத நிருத்யாவையும் செய்கிறார்கள், அது தோராயமாக "நேமோஸ்தவா/தையம்" என்றும் விளக்கப்படுகிறது.  இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பாணர் சமூகத்தால் நிகழ்த்தப்படும் "ஆன்மீக நடனம்" போன்றது. தமிழ்நாட்டின், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, "பாணர்" சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் 'விறலியர்' என்று அழைக்கப்பட்டனர்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Peter J., Claus. "Text Variability and Authenticity in Siri cult". class.csueastbay.edu. பார்க்கப்பட்ட நாள் 10 September 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "The Scheduled Castes and Scheduled Tribes orders (Amendment) Act, 1956" (PDF). indianchristians.in. Archived from the original (PDF) on 11 July 2012. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணர்_(குந்தாபுரா)&oldid=3589695" இலிருந்து மீள்விக்கப்பட்டது