விளையாட்டுப் பானை

(பானை உடைத்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்கட்டு உத்தி விளையாட்டுகளில் ஒன்று பானை உடைத்தல். இது விழாக்கால விளையாட்டுகளில் மட்டுமே விளையாடப்படும். மக்கள் இதனைப் 'பானை உடைத்தல்' என்றே குறிப்பிட்டாலும், மங்கலச் சொல்லாக இதனை நாம் விளையாட்டுப் பானை என்று குறிப்பிடல்லாம்.

பானை உடைத்தல் விளையாட்டு தை மாதம் மூன்றாம் நாள் நடைபெறும். உரிமரம் விளையாட்டில் உரிப்பானைகளை உடைக்கும் விளையாட்டாக இது கிருஷ்ண ஜெயந்தி அன்று நடைபெறும்.

பானை உடைப்பவர் கையில் கம்பு ஒன்று தரப்படும். அவரது கண்கள் கட்டப்படும். கட்டப்பட்ட பின்னர் திசை தெரியாவண்ணம் அவர் இரண்டு மூன்று சுற்றுகள் திருப்பி விடப்படுவார். சுமார் 20 அடி தொலைவில் பானை வைக்கப்படும். பானை உடைப்பதற்கு மூன்று வாயப்புகள் தரப்படும். உடைக்காவிட்டால் அவரது கண் அவிழ்த்து விடப்பட்டு வேறொருவருக்கு வாய்ப்பு தரப்படும். கரிநாள் விளையாட்டுகளில் ஒன்றாக இது சுமார் அரை மணி நேரம் நடக்கும்.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டுப்_பானை&oldid=1398063" இலிருந்து மீள்விக்கப்பட்டது