பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகம், குருகிராம்

இந்திய அருங்காட்சியகம்

பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகம் (Heritage Transport Museum, Gurgaon) மனித போக்குவரத்து வரலாற்றைக் கூறுகின்ற இந்தியாவின் முக்கியமான ஓர் அருங்காட்சியகமாகும். இது அரியானா மாநிலத்தின் நூக் மாவட்டத்தில் உள்ள தௌரு நகரத்தில் அமைந்துள்ளது. [1] இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள பொருள்கள் இந்தியாவில் போக்குவரத்து வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன.[2] 3.01 ஏக்கரில் அமைந்துள்ள இவ்வருங்காட்சியகத்தில் 95,000 சதுர அடியில் கண்காட்சி அரங்குகள் உள்ளன. [2] 2013 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் மாறியது. [3]

அமைப்பு தொகு

அருங்காட்சியகம் பன்னிரண்டு வகையான சேகரிப்புகளால் அமைக்கப்பட்டுள்ளது: [1]

  • மோட்டார் வாகனம் காட்சிக்கூடம்
  • முன் இயந்திரமயமாக்கப்படுவதற்கு முன்னரான போக்குவரத்து
  • கனரக இயந்திரமயமாக்கப்பட்ட போக்குவரத்து
  • இரயில்வே
  • விமான போக்குவரத்து
  • கிராமப்புற போக்குவரத்து
  • இரு சக்கர வாகனங்கள்
  • போக்குவரத்தில் சேகரிக்கக்கூடிய இந்திய பொம்மைகள்
  • வரலாற்றுத் தொகுப்புகள்
  • கடல்சார் காட்சியகங்கள்
  • சமகால கலைக்கூடம்
  • பழங்குடி கலை

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Heritage Transport Museum Manesar Gurgaon".
  2. 2.0 2.1 "Heritage Transport Museum".
  3. "Heritage Transport Museum: a museum with a difference". https://www.livemint.com/Leisure/rRTugVxAjOaykj2EboRADN/Heritage-Transport-Museum-a-museum-with-a-difference.html. 

புற இணைப்புகள் தொகு